பிலிப்பின்ஸில் புகைப்பிடிக்கத் தடை

பிலிப்பின்ஸ் நாட்டில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது

பிலிப்பின்ஸ் நாட்டில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளிலேயே புகையிலைக்கு எதிரான மிகக் கடுமையான நடவடிக்கைகளை பிலிப்பின்ஸ் நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிலிப்பின்ஸில் தற்போது பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவில் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே கையெழுத்திட்டுள்ளார்.
இதையடுத்து, நாடு முழுவதுமுள்ள பொது இடங்களில் சிகரெட் விற்பனை செய்வது மற்றும் புகைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
பள்ளிகள், பூங்காக்கள், சிறுவர்கள் கூடும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 100 மீட்டர் சுற்றளவுக்குள் புகையிலை பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 60 நாட்களில் அனைத்துப் பகுதிகளிலும் அமலுக்கு வரும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிலைப் பழக்கத்தால் பிலிப்பின்ஸில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் மரணமடைகின்றனர். இந்த நிலையில், இரண்டாவது முறையாக அதிபரானால் புகையிலைப் பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாக டுடேர்தே உறுதியளித்திருந்தார். அதன் ஒருபகுதியாகவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிலிப்பின்ஸ் இரவு விடுதிகளில் இரவு 2.00 மணிக்கு மேல் மது அருந்தும் நிகழ்ச்சிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது. இருப்பினும், அந்த உத்தரவு இன்னும் அமல்படுத்தப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com