ஆஸ்திரேலியா உள்ளிட்ட 3 நாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து விரைவில் ஒத்திகை: இந்தியா முடிவு

சிங்கப்பூரைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 3 நாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து விரைவில் ஒத்திகை நடத்துவது என்று இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது.

சிங்கப்பூரைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 3 நாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து விரைவில் ஒத்திகை நடத்துவது என்று இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது.
இந்தியா-சிங்கப்பூர் நாடுகளின் கடற்படைகள் கூட்டாக இணைந்து, தென் சீனக் கடல்பகுதியில் வருடாந்திர ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. இந்த ஒத்திகை, வரும் 24-ஆம் தேதி வரை நடக்கிறது. இதில், இந்திய கடற்படையில் உள்ள ஐ.என்.எஸ். சிவாலிக், சகயாத்ரி, ஜோதி, காமோத்ரா ஆகிய போர்க் கப்பல்களும், பி8-1 ரக அதிநவீன விமானமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த ஒத்திகையைத் தொடர்ந்து, இந்தோனேசியா, பாப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளின் கடற்படைகளுடன் கூட்டாக இணைந்து விரைவில் இந்திய கடற்படை ஒத்திகையில் ஈடுபடவுள்ளது. இதுகுறித்து இந்திய கடற்படையின் கிழக்குப் பிராந்தியப் பிரிவு மூத்த அதிகாரி விஸ்வஜித் தாஸ் குப்தா கூறியதாவது:
சிங்கப்பூருடனான நமது ஒத்திகை நிறைவு பெற்றதும், இந்தோனேசியா, பாப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து நமது கடற்படை ஒத்திகையில் ஈடுபடவுள்ளது. நட்பு நாடுகளுடன் ராணுவ ரீதியிலான தொடர்பை ஏற்படுத்துவதற்கு வசதியாக, கடற்படைகள் இடையே ஆக்கப்பூர்வமான தொடர்பை எப்போதும் வைத்து கொள்ள வேண்டியுள்ளது என்றார் விஸ்வஜித் தாஸ்குப்தா.
சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ஜாவேத் அஷ்ரஃப் கூறுகையில், "சிங்கப்பூருடனான ராஜீய நட்புறவை இந்திய கடற்படை மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது; மேலும், இப்பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை, கடலோரப் பாதுகாப்பு ஆகியவை நிலவ வேண்டும் என்ற தனது நம்பிக்கையையும் இந்தியா மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com