இனி பேஸ்புக் வழியா சாப்பாடும் ஆர்டர் பண்ணலாம் பாஸ்!

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் அறிமுகம் செய்துள்ள புதிய வசதியின் படி இனி பயனாளர்கள் தங்களுக்கு வேண்டிய உணவு வகைகளையும்...
இனி பேஸ்புக் வழியா சாப்பாடும் ஆர்டர் பண்ணலாம் பாஸ்!

சான்பிரான்சிஸ்கோ: பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் அறிமுகம் செய்துள்ள புதிய வசதியின் படி இனி பயனாளர்கள் தங்களுக்கு வேண்டிய உணவு வகைகளையும், பேஸ்புக் மூலமே ஆர்டர் செய்து கொள்ளும் வசதி வந்துள்ளது.

தற்பொழுது பேஸ்புக் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய வசதியின் படி, பயனாளர்கள் தங்களது அலைபேசியில் உள்ள பேஸ்புக் செயலி மூலமே, தங்களுக்கு வேண்டிய உணவு வகைகளை முன்பதிவு செய்ய முடியும். அதற்காக இனி குறிப்பிட்ட உணவகங்களின் தனியான செயலி அல்லது இணையதளத்திற்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது.

ஆனால் இந்த வசதியானது தற்பொழுது முதல் கட்டமாக அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை பய்னபடுத்த பயனாளர்கள் தங்களது பேஸ்புக் செயலியில் இருக்கும் ஹைாம்பர்கர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அடுத்த கட்டமாக உணவகங்களில் இருந்து உணவு வகைகளை டெலிவரி.காம் அல்லது ஸ்லைஸ் தளம் இணையதளங்கள் மூலம் ஆர்டர் செய்யலாம்.   

கடந்த ஆண்டு அக்டோபரில்தான் பேஸ்புக் நிறுவனமானது டெலிவரி.காம் மற்றும் ஸ்லைஸ் நிறுவனங்களுடன் இணைந்து சேவைகள் வழங்குவதாக தகவலை வெளியிட்டது. தற்பொழுது அறிமுகமாகியுள்ள இந்த வசதியானது அதன் அடுத்த கட்ட நடவடிக்கை தான் என பேஸ்புக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com