ஒரே கடியில் டெங்கு, சிக்குன்குன்யா: மிரட்டும் ஏடிஸ் எகிப்தி கொசு!

ஜிகா வைரஸூக்கு காரணமான ஏடிஸ் எகிப்தி கொசுக்கள் மனிதர்களைக் கடிக்கும்போது சிக்குன்குன்யா மற்றும் டெங்கு வைரஸ்களையும் சேர்த்தே பரப்பலாம் என்பது புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஒரே கடியில் டெங்கு, சிக்குன்குன்யா: மிரட்டும் ஏடிஸ் எகிப்தி கொசு!

ஜிகா வைரஸூக்கு காரணமான ஏடிஸ் எகிப்தி கொசுக்கள் மனிதர்களைக் கடிக்கும்போது சிக்குன்குன்யா மற்றும் டெங்கு வைரஸ்களையும் சேர்த்தே பரப்பலாம் என்பது புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள கொலராடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஒரு கொசு ஒரே நேரத்தில் மூன்று வைரஸ்களை பரப்ப முடியும் என்பது ஆய்வில், கண்டறியப்பட்டது. இருப்பினும், இயற்கையில் இந்த நிகழ்வு மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.
மிகச்சிறிய உடலைக் கொண்ட கொசுவில் மூன்று வைரஸ்களின் பெருக்கம் இருப்பது என்பது மிகவும் சுவாரஸ்யமான விஷயம். பொதுவாக, இந்த வகையான கொசுக்களில் இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு வகையான வைரஸ்கள் இருந்தால் அதனால் பெரும்பாலும் பாதிப்புகள் இருக்காது. ஆனால், முதல் முறையாக சிக்குன்குன்யா மற்றும் டெங்கு பாதிப்புகள் சேர்ந்து இருப்பது 1967-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.
அதற்குப் பிறகு அண்மையில்தான், ஜிகா-டெங்கு வைரஸ், ஜிகா-சிக்குன்குன்யா மற்றும் இந்த மூன்று பாதிப்புகளும் சேர்ந்தே இருப்பது தென் அமெரிக்காவில் ஜிகா வைரஸ் பாதிப்பின்போது தெரியவந்தது என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொலராடோ பல்கலையின் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை "நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com