வட கொரியா மேலும் ஓர் ஏவுகணை சோதனை

வட கொரியா புதிய ஏவுகணையை விண்ணில் செலுத்திப் பரிசோதித்ததாக தென் கொரியா தெரிவித்தது.
வட கொரியா மேலும் ஓர் ஏவுகணை சோதனை

வட கொரியா புதிய ஏவுகணையை விண்ணில் செலுத்திப் பரிசோதித்ததாக தென் கொரியா தெரிவித்தது.

தென் கொரியாவின் முப்படை தலைமை தளபதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருப்பதாவது:
தெற்கு பியோங்கான் மாகாணம், புக்சாங் பகுதியிலிருந்து புதிய ஏவுகணையை வட கொரியா விண்ணில் செலுத்திப் பரிசோதித்தது. அந்த ஏவுகணையின் திறன், அது எந்த ரகத்தைச் சேர்ந்தது உள்ளிட்ட விவரங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஹுவாúஸாங்-12' என்கிற புதிய ரக ஏவுகணை சோதனையை கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட நிலையில், மீண்டும் ஒரு புதிய ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் மேம்படுத்தப்பட்ட வடிவத்தைத்தான் தற்போது செலுத்தியதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் செலுத்திய "புக்சுக்úஸாங்-2' ரக ஏவுகணையைச் சேர்ந்தது இது என்றும் தென் கொரிய ஊடகங்கள் ஊகச் செய்தி வெளியிட்டன.
இவ்வாண்டு வட கொரியா மேற்கொண்ட 10-ஆவது ஏவுகணை சோதனை இதுவாகும். கண்டம் விட்டு கண்டம் பாயும் சக்தி வாய்ந்த ஏவுகணையை உருவாக்க வட கொரியா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளது. கடந்த வாரம் செலுத்தப்பட்ட "ஹுவாúஸாங்-12' ஏவுகணை அதிகபட்சமாக 4,500 கி.மீ. தொலைவு பறக்கும் திறன் கொண்டதாக இருந்தது என்பதை மேற்கத்திய நாடுகள் உறுதி செய்தன.
மேலும், வட கொரியா இது வரை உருவாக்கிய ஏவுகணைகளிலேயே இந்த "ஹுவாúஸாங்-12' ஏவகணைதான் மிகவும் சக்தி வாய்ந்தது என்று அமெரிக்க ராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உருவாக்குவதில் வட கொரியா முன்னேறியுள்ளது தெளிவாகத் தெரிகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஏராளமான ஏவுகணை சோதனைகளை அந்த நாடு மேற்கொண்டது. இது வரை இரு அணுகுண்டு சோதனைகளையும் மேற்கொண்டது. அணுகுண்டை ஏந்தி, வெற்றிகரமாகத் தொலை தூரம் பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும் திறன் தங்களிடம் உள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது நினைவுகூரத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com