குண்டுவெடிப்பு சம்பவத்தால் தனது இதயம் உடைந்துவிட்டது: பாடகி அரியானா கிராண்டி

இங்கிலாந்தில் இசை நிகழ்ச்சியின் போது நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததற்கு பாடகி அரியானா கிராண்டி வருத்தம்
குண்டுவெடிப்பு சம்பவத்தால் தனது இதயம் உடைந்துவிட்டது: பாடகி அரியானா கிராண்டி

இங்கிலாந்தில் இசை நிகழ்ச்சியின் போது நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததற்கு பாடகி அரியானா கிராண்டி வருத்தம் தெரிவித்துள்ளார்.

மான்செஸ்டர் நகரில் உள்ள வடக்கு இங்கிலிஷ் சிட்டி என்ற இடத்தில் திங்கள்கிழமை இரவு (மே 22) அமெரிக்க பிரபல பாடகியும், நடிகையுமான அரியானா கிராண்டியின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

இதில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் உற்சாகம் பொங்க இசை நிகழ்ச்சியை உற்சாகம் பொங்க ஆரவாரத்துடன் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணியளவில் திடீரென அப்பகுதியில் பயங்கர சத்தத்துடன் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. பெரும் கூச்சலோடு, கூட்டத்தினர் அங்குமிங்கும் ஓடியதால் அங்கு குழப்பம் நிலவியது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தற்போது வரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக மான்செஸ்டர் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“Broken. From the bottom of my heart, I am so so sorry. I don’t have the words,”

இந்நிலையில், இந்த துயர சம்பவம் அரியானா கிராண்டி, தனது டுவிட்டர் பக்க பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், தனது இசை நிகழ்ச்சியின்போது நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தால் 22 பேர் உயிரிழந்ததை அறிந்து தனது இதயம் சுக்கு நூறாக நொறுங்கிவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com