மாஸ்கோவில் சூறைக் காற்று: 13 பேர் உயிரிழப்பு

ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் திங்கள்கிழமை வீசிய சூறைக் காற்றில் 13 பேர் பலியாகினர்.

ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் திங்கள்கிழமை வீசிய சூறைக் காற்றில் 13 பேர் பலியாகினர்.
இதுகுறித்து அந்த நகர மருத்துவத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மாஸ்கோவில் கடுமையான சூறைக்காற்று வீசியதால் காயமடைந்த 50 பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டனர். அவர்களில் 11 பேர் உயிரிழந்தனர்'' என்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சூறைக் காற்று காரணமாக மரம் விழுந்து ஒரு சிறுமி பலியானதாகவும், காற்றில் அடித்துச் செல்லப்பட்ட வேலி தாக்கி 57 வயது நபர் உயிரிழந்ததாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
இந்த சூறைக் காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள் சரிந்து சேதம் ஏற்பட்டுள்ளதாக மாஸ்கோ நகர மேயர் செர்கெய் சோப்யானின் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com