என்னை இப்படிக் கூறி விட்டாரே? வடகொரிய அதிபர் மீது ட்ரம்ப் வருத்தம்! 

என்னை வயதானவன் என்று கூறி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கிண்டல் செய்திருக்கிறார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வருத்தப்பட்டுள்ளார்.
என்னை இப்படிக் கூறி விட்டாரே? வடகொரிய அதிபர் மீது ட்ரம்ப் வருத்தம்! 

ஹனோய்:  என்னை வயதானவன் என்று கூறி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கிண்டல் செய்திருக்கிறார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வருத்தப்பட்டுள்ளார்.

வியட்நாமில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சென்றுள்ளார். வழியில் சீனா சென்ற அவர் அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.

பின்னர் பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வரிசையாக சில செய்திகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

உலக நாடுகளின் தடையினை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ராக்கெட் சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது. அந்நாட்டிற்கு எதிரான தடையை தொடர்ந்து சீன அதிபர் ஜின்பிங் அமல்படுத்தி வருகிறார். அணு ஆயுத பயன்படுத்துதலை அந்நாடு கைவிட வேண்டும் என ஜின்பிங் விரும்புகிறார்.

என்னை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் 'கிழடு' என கூறி கிண்டல் செய்துள்ளார். நான் ஒரு பொழுதும் அவரை குட்டையான மற்றும் குண்டான நபர் என்று கூறியதில்லை. ஆனால் அவர் இப்படி கூறி என் மனதினை புண்படுத்தியுள்ளார்.

நான் அவருடைய நண்பராக கடும் முயற்சி செய்கிறேன். அது என்றாவது ஒருநாள் நடைபெற கூடும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com