26 அடி நீள மலைப்பாம்பினை 'சண்டையிட்டு' கொன்று தின்ற கிராம மக்கள்! 

கிராமவாசி ஒருவரைத் தாக்கிய ஏறக்குறைய 26 அடி நீள மலைப்பாம்பினை இந்தோனேசிய கிராம மக்கள் 'சண்டையிட்டு' கொன்று தின்ற விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
26 அடி நீள மலைப்பாம்பினை 'சண்டையிட்டு' கொன்று தின்ற கிராம மக்கள்! 

ஜகார்தா: கிராமவாசி ஒருவரைத் தாக்கிய ஏறக்குறைய 26 அடி நீள மலைப்பாம்பினை இந்தோனேசிய கிராம மக்கள் 'சண்டையிட்டு' கொன்று தின்ற விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பாடங் கன்சல் மாவட்டம் உள்ளது. இங்குள்ள பாமாயில் தோட்டம் ஒன்றில் காவலாளியாக இருப்பவர் ராபர்ட் நபபன். இவர் நேற்று முன்தினம் பணியிலிருக்கும் பொழுது அருகில் உள்ள சாலையொன்றில் மிகப் பெரிய மலைப்பாம்பு ஒன்றினைப் பார்த்திருக்கிறார். அந்த மலைப்பாம்பானது 7.8 மீட்டர் நீளமுள்ளது. அதாவது ஏறக்குறைய 26 அடி நீளம் கொண்டதாகும். 

உஷாரான ராபர்ட் அதனைப் பிடிக்க முயன்றிருக்கிறார். அதன் காரணமாக அது அவரைத் தாக்கியிருக்கிறது. அதனுடன் போராடிக் கொண்டே அவர் உதவிக்கு ஆட்களைக் கூப்பிட்டிருக்கிறார். வந்த கிராமத்தார்களுடன் சேர்ந்து போராடி அந்த பெரிய மலைப்பாம்பினை அவர்கள் கொன்று விட்டார்கள். இதன் காரணமாக ராபர்ட் நபபன் கடுமையாக காயமாடைந்தார்.

பின்னர் அந்த பாம்பினை ஊர்மக்கள் காட்சிக்காக கட்டித் தொங்க விட்டனர். பின்னர் வெட்டித் துண்டுகளாக்கி, வறுத்து அனைவரும் சேர்ந்து உண்டிருக்கின்றனர்.

இது தொடர்பாக உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மலைப்பாம்புடனான சண்டையில் ராபர்ட் நபபனின் கை மோசமாக சேதமடைந்துள்ளது. அநேகமாக அது முழுமையாக நீக்கப்படலாம். இத்தனை பெரிய மலைப்பாம்பு என்பது இங்கு அதிசயமான ஒன்றில்லை.பாம்பினை அவர்கள் சாப்பிட்டது பற்றிக் கூறும் பொழுது அவர், 'அங்கு இருந்த நண்பர்கள் பாம்பு உணவு மிகவும் சுவையாக இருந்ததாகக் கூறினார்கள். 7 மீட்டர் பாம்பு என்றால் அது உண்மையிலேயே மிக அதிகமான உணவுதான்' என்று அவர் தெரிவித்தார்.             

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com