மீண்டும் சிறப்பு ஹெச்-1பி விசாக்களை வழங்கத் தொடங்கியது அமெரிக்கா

தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறப்பு ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா) வழங்கும் நடைமுறையை அமெரிக்கா மீண்டும் தொடங்கியுள்ளது.
மீண்டும் சிறப்பு ஹெச்-1பி விசாக்களை வழங்கத் தொடங்கியது அமெரிக்கா

தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறப்பு ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா) வழங்கும் நடைமுறையை அமெரிக்கா மீண்டும் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணியாற்றுவதற்கான ஹெச்-1பி விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள், அந்த விசாவை விரைவாகப் பெறுவதற்காக சிறப்பு நடைமுறைக்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாள்களுக்குள் ஹெச்-1பி விசா வழங்கப்படும்.
எனினும், இந்த விசாவுக்கான விண்ணப்பங்கள் அளவுக்கு அதிகமாகக் குவிந்ததால், சிறப்பு விசா வழங்கும் நடைமுறையை குடியேற்ற அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தாற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.
இந்த நிலையில், அந்த நடைமுறை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் இந்தியர்களுக்கு இந்த விசா முறை ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com