யுனெஸ்கோவுக்கு புதிய தலைவர் தேர்வு

யுனெஸ்கோ அமைப்பின் புதிய தலைவராக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் கலாசாரத் துறை அமைச்சர் அட்ரே அஜெüலே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

யுனெஸ்கோ அமைப்பின் புதிய தலைவராக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் கலாசாரத் துறை அமைச்சர் அட்ரே அஜெüலே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர், தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட கத்தாரைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் அல் } கவாரியைக் காட்டிலும் இரு வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றார்.
சர்வதேச அளவில் கல்வி, அறிவியல், கலாசாரம் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டுவதற்காக யுனெஸ்கோ அமைப்பு தொடங்கப்பட்டது. உலகளாவிய புரதானச் சின்னங்கள், பாரம்பரியக் கட்டடங்களைப் பேணிக் காக்கும் நடவடிக்கைகளையும் அந்த அமைப்பு பிரதானமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அந்த அமைப்பின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்றது. இதில் யுனெஸ்கோ உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று வாக்களித்தனர். அட்ரே அஜெüலே மற்றும் அப்துல் அஜீஸ் ஆகிய இருவரும் தலைவர் பொறுப்புக்குப் போட்டியிட்டனர். அதில் அட்ரேவுக்கு 30 வாக்குகளும், அப்துல் அஜீஸýக்கு 28 வாக்குகளும் கிடைத்தன.
இதையடுத்து யுனெஸ்கோ அமைப்பின் அடுத்த தலைவராக அட்ரே தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த மாதம் யுனெஸ்கோ பொதுக் குழு கூடி இதை முறைப்படி அறிவிக்கும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com