சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்தியா தயார்: வீரேந்திர குப்தா

சீன ராணுவத்தின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐடிஎஸ்ஏ) முன்னாள் தலைவர் வீரேந்திர குப்தா தெரிவித்துள்ளார்.
சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்தியா தயார்: வீரேந்திர குப்தா

சீன ராணுவத்தின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐடிஎஸ்ஏ) முன்னாள் தலைவர் வீரேந்திர குப்தா தெரிவித்துள்ளார்.
டோக்கா லாம் விவகாரத்தில் இந்தியா - சீனா இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இவ்வாறு அவர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர, பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களை விமர்சித்தும் அவர் பல்வேறு கருத்துகளைக் கூறியுள்ளார். இந்தியக் கல்வி நிறுவனங்களுக்கான அமைப்பு சார்பில் கருத்தரங்கு ஒன்று அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வீரேந்திர குப்தா பேசியதாவது:
அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச நாடுகள் அனைத்தும் அத்தகைய ஆயுதங்களை வைத்திருப்பதற்கு தடை விதித்துள்ள நிலையில், பாகிஸ்தானோ தனது எதிரிகளை மிரட்டும் கேடயமாக அதைப் பயன்படுத்துகிறது. 
அந்நாட்டிலிருந்து செயல்படுத்தப்படும் பயங்கரவாத நடவடிக்கைளுக்கு அணு ஆயுத உதவி அளிக்கும்பட்சத்தில், அது பேரழிவை ஏற்படுத்தக் கூடும். பொதுவாகவே, இந்தியாவை தவறாகச் சித்திரிக்குமாறு தனது நாட்டு ராணுவத்தினரையும், அரசியல்வாதிகளையும் பாகிஸ்தான் நிர்பந்தித்து வருகிறது. அந்த நிலை காலங்காலமாகத் தொடர்ந்து வருகிறது.
டோக்கா லாம் விவகாரத்துக்குப் பிறகு சீனாவுடனான உறவில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 1962-ஆம் ஆண்டில் (சீனாவுடனான போரில் இந்தியா பின்னடைவைச் சந்தித்த வருடம்) இந்தியாவின் ஆற்றல் வேறு. ஆனால், தற்போதைய நிலை வேறு. பிரதமர் மோடியின் தலைமையிலான இந்திய அரசு ராணுவரீதியாகவும் சரி; அரசியல்ரீதியாகவும் சரி, வலிமையுடன் உள்ளது. சீனா ராணுவத்தின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்கிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com