மக்களுக்காக ஒன்றுகூடிய 5 அதிபர்கள்

அமெரிக்காவில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் தொடர்பான நிகழ்வில் ஒன்று கூடிய 5 அதிபர்கள்.
மக்களுக்காக ஒன்றுகூடிய 5 அதிபர்கள்

சமீபத்தில் அமெரிக்காவை ஹார்வி, இர்மா எனும் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து தாக்கியது. இதனால் அதன் கடலோர மாகாணங்கள் பெரிய அளவிலான சேதத்தைச் சந்தித்தன. பல லட்சம் மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமெரிக்க அரசாங்கம் விரைவாக சீரமைத்து வருகிறது. இதற்கு பல்வேறு சமூக அமைப்புகளும் தங்களின் பங்களிப்பை அளித்து வருகிறது.

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட் பகுதிகளை சீரமைக்க நிதி திரட்டும் பிரமாண்ட நிகழ்ச்சி அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் 5 பேர் பங்கேற்றதுதான் தனிச்சிறப்பாக அமைந்தது. மக்களுக்கான நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவைச் சேர்ந்த 5 அதிபர்களும் மக்களுக்காக ஒன்று கூடி நிதி திரட்டினர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஏ&எம் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்ட இந்நிகழ்வுக்கு "Deep From the Heart: The One America Appeal" என்று பெயரிடப்பட்டிருந்தது.

இதில், ஜிம்மி கார்டர், பில் கிளிண்டன், ஜார்ஜ் ஹெச்.டபள்யூ. புஷ், ஜார்ஜ் டபள்யூ. புஷ், பாரக் ஒபாமா ஆகிய 5 முன்னாள் அமெரிக்க அதிபர்களும் ஒரே மேடையில் கலந்துகொண்டு புயல் பாதிப்புக்கான நிவாரண நிதி திரட்டினர். அச்சமயம் அமெரிக்க தேசிய கீதம் அங்கு இசைக்கப்பட்டது.

இதன்மூலம் மொத்தம் 31 மில்லியன் டாலர்கள் புயல் நிவாரண நிதியாக திரண்டதாக விழா ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்விழாவில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்துகொள்ளவில்லை. 

இருப்பினும், புயல் பாதிப்பு மற்றும் அதனை சீர்செய்வது தொடர்பாக டொனால்டு டிரம்ப் பேசிய விடியோ ஒன்று அங்கு ஒளிபரப்பப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com