ஜப்பானில் இன்று நாடாளுமன்றத் தேர்தல்: ஷின்ஸோ அபே வெற்றி பெற வாய்ப்பு

ஜப்பானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது.
ஜப்பானில் இன்று நாடாளுமன்றத் தேர்தல்: ஷின்ஸோ அபே வெற்றி பெற வாய்ப்பு

ஜப்பானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது.
இத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று பிரதமர் ஷின்ஸோ அபே ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வார் என்று பல்வேறு கருத்து கணிப்புகளும் கூறுகின்றன.
அந்த நாட்டு நாடாளுமன்ற கீழவையில் உள்ள 465 இடங்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு வரை பதவிக் காலம் இருந்தபோதிலும், இடைக்காலத் தேர்தல் அறிவிப்பை பிரதமர் ஷின்úஸா அபே திடீரென வெளியிட்டு எதிர்க்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
சர்வதேச பொருளாதார மந்த நிலையிலும், ஜப்பானின் பொருளாதாரத்தை சீராக வைக்க அவர் உரிய முயற்சிகள் எடுத்து வருகிறார் என்ற நம்பிக்கையும் வட கொரியா, தென் சீனக் கடல் போன்ற பிரச்னைகளில் அவரது உறுதியான நிலைப்பாடும் அவருக்கு மீண்டும் வெற்றியைத் தேடித் தரும் என்று கூறப்படுகிறது.
பல கருத்துக் கணிப்புகளும் தெரிவித்திருப்பது போல அவர் மூன்றில் இரு பங்கு இடங்களில் வென்று ஆட்சி அமைத்தால், ஜப்பான் அரசியல் சாசனத்தில் முக்கியத் திருத்தங்களைக் கொண்டு வரும் அவருடைய நீண்ட நாள் கனவை நிறைவேற்றுவார் என்று கருதப்படுகிறது.
அண்மையில் தொடங்கப்பட்ட பார்ட்டி ஆஃப் ஹோப் என்னும் நம்பிக்கை கட்சி டோக்கியோவில் உள்ளாட்சித் தேர்தலை வென்றதால் அந்தக் கட்சி மீது திடீர் எதிர்பார்ப்பு எழுந்தது. இதைத் தொடர்ந்து, பிரதமரின் கட்சியிலிருந்து மூத்த தலைவர்கள் உள்பட பலர் வெளியேறி நம்பிக்கை கட்சியில் சேர்ந்தனர். இதனால் பிரதமருக்கு அரசியல் பின்னடைவு என்று கூறப்பட்டது. பிரதமரின் ஆதரவு சரிந்துள்ளதாக சில அரசியல் விமர்சகர்கள் கூறினர். 
இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கான இடைக் கால தேர்தலை ஷின்úஸா அபே திடீரென அறிவித்து எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். நம்பிக்கை கட்சி நாடு தழுவிய அளவில் போதிய வாக்காளர்களின் ஆதரவைப் பெறவில்லை என்பது பல்வேறு கருததுக் கணிப்புகளிலிருந்து தெரிய வந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com