5 ஆண்டுகளில் 134 நாடுகளிலிருந்து 5 லட்சம் பாகிஸ்தானியர் வெளியேற்றம்

இந்தியா உள்ளிட்ட 134 நாடுகளிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான பாகிஸ்தானியர் வெளியேற்றப்பட்டனர் என்று அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட 134 நாடுகளிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான பாகிஸ்தானியர் வெளியேற்றப்பட்டனர் என்று அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்திருப்பது: ஐரோப்பிய நாடுகள், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இடங்களிலிருந்து பிரச்னைக்குரிய பாகிஸ்தானியர் வெளியேற்றப்படுவது என்பது வழக்கமாக நடைபெறுவதுதான். ஆனால் மிகச் சிறிய ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளிலிருந்தும் பாகிஸ்தானியர் சர்ச்சைக்கு உள்ளாகி, கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவது வழக்கமாகி வருகிறது.
கடந்த 2012 ஜனவரி முதல் 2017 ஜூன் வரையில் 5,44105 பாகிஸ்தானியர் பல்வேறு நாடுகளிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். 
அதிகபட்சமாக சவூதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். ஐந்தாண்டு கால அளவில் சவூதியிலிருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தானியர் எண்ணிக்கை 2,80,052 ஆகும். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை மட்டும் 64,689 பேர் வெளியேற்றப்பட்டனர். இது 'சாதனை' எண்ணிக்கையாகும். 2012-2017 கால அளவில் இந்தியாவிலிருந்து 49 பாகிஸ்தானியர் வெளியேற்றப்பட்டனர்.
ஈரான், இராக், சிரியா, யேமன், லிபியா உள்ளிட்ட அரபு நாடுகளிலிருந்தும் ஏராளமான பாகிஸ்தானியர் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை மட்டும் 87,165 பாகிஸ்தானியர் பல்வேறு நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 
எக்ஸ்பிரஸ் டிரிபியூன் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் இது தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com