நடுவானில் செயல்படாத ஏ.சி: மயங்கிச் சரிந்த விமானப் பயணிகள்! (விடியோ இணைப்பு)

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் பொழுது  குளிர்சாதன வசதிகள் செயல்படாததால், விமானப் பயணிகள் அவதியுற்று மயங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.  
நடுவானில் செயல்படாத ஏ.சி: மயங்கிச் சரிந்த விமானப் பயணிகள்! (விடியோ இணைப்பு)

கராச்சி விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் பொழுது  குளிர்சாதன வசதிகள் செயல்படாததால், விமானப் பயணிகள் அவதியுற்று மயங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

சவுதி அரேபியாவின் மதினா நகரத்தில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு, சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனத்தினைச் சேர்ந்த விமானம் SV -706 கடந்த சனிக்கிழமை காலை புறப்பட்டது ஹஜ் புனிதப் பயணத்தினை முடித்து விட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த பயணிகளைக் கொண்டிருந்த இந்த விமானத்தில், பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகளாவார்கள்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் பொழுது, அதிலுள்ள குளிர்சாதன வசதிகள் திடீர் என செயல்படாமால் நின்று விட்டது. இதன் காரணமாக அங்கு திடீரென்று வெப்ப நிலை அதிகரித்தது. இதன் காரணமாக பெரும்பாலானவர்களுக்கு மூச்சுத் திணறல் உண்டானது.  

இதன் காரணமாக கையில் கிடைத்த காகிதக் கற்றைகளை கொண்டு அனைவரும்காற்று வீசத் துவங்கினர். அத்துடன் சில வயதானவர்கள் இதன் காரணமாக மயங்கிச் சரிந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

பயணிகளில் சிலர் கூறும் பொழுது விமானம் புறப்படும் முன்னரே, ஏறியவுடனே குளிர்சாதன வசதிகள் சரியாக செயல்படாததினைக் கண்டு  புகார் கூறியதாகவும், விமானம் புறப்படும் முன்னரே அது சரி செய்யப்படும் என்று கூறியவர்கள் கடைசி வரை சரி செய்யவே இல்ல என்றும் தெரிவித்தனர்.

பின்னர் கடும் சிரமங்களுக்குப் பிறகு மூன்று மணி நேரம் தாமதமாக அந்த விமானம் தரையிறங்கியது

இந்த தகவல்களை எல்லாம் பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் 'டான்' செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.

சம்பவத்தின் பொழுது அந்த விமானத்திலிருந்து சக பயணி ஒருவர் எடுத்த விடியோவானது தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது

விடியோ: 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com