மெக்ஸிகோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 90-ஆக உயர்வு

மெக்ஸிகோவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 90-ஆக அதிகரித்தது.

மெக்ஸிகோவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 90-ஆக அதிகரித்தது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
மெக்ஸிகோவில் கடந்த வியாழக்கிழமை இரவு நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 90-ஆக அதிகரித்துள்ளது.
சியாபாஸ் மற்றும் டாபஸ்கோ மாகாணங்களில் மட்டும் 19 பேர் பலியாகியுள்ளனர். வீடுகள், தேவாலயங்கள், பள்ளிகள் என ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
இவற்றை அகற்றும் பணிகளில், போலீஸார், ராணுவத்தினர், அவசரகால சேவை பணியாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். பலர் வீடு உடைமைகளை இழந்து செய்வதறியாது அல்லாடி வருகின்றனர்.
ஜுகிட்டான் நகரில் கட்டட இடிபாடுகள் மலைபோல் குவிந்து காணப்படுகின்றன. அங்கு, பெரும்பாலான கட்டடங்கள் வசிப்பதற்குத் தகுதியற்றவையாகவே மாறியுள்ளன.
அடுத்தடுத்த பின்னதிர்வுகள் உணரப்படுவதால் மக்கள் இன்னும் பீதியிலேயே உறைந்து முகாம்களிலேயே தங்கியுள்ளனர். அவர்கள், வசிப்பிடங்களுக்கு திரும்புவதில் அதிக தயக்கம் காட்டி வருகின்றனர்.
கடந்த வாரம் வியாழக்கிழமை நிகழ்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.1 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்துக்குப் பிறகு சுமார் 800 பின்னதிர்வுகள் உணரப்பட்டதாகவும் அவற்றில் 60 பின்னதிர்வுகள் ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாகப் பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்ததாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com