வடகொரியா புதிய ஏவுகணைச் சோதனை: ஜப்பான் மீது பறந்ததால் பதட்டம்

வடகொரியா வெள்ளிக்கிழமை நடத்திய புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனையால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
வடகொரியா புதிய ஏவுகணைச் சோதனை: ஜப்பான் மீது பறந்ததால் பதட்டம்

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணையை வெள்ளிக்கிழமை ஏவியது. இது ஜப்பான் மீது பறந்து பசிபிக் பெருங்கடலில் சென்று வீழ்ந்தது. இதனால் ஜப்பானில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

இந்த ஏவுகணையை ஏவியதன் மூலமாக இதுவரை 15 முறை அணுஆயுத சோதனையை நடத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த செப்டம்பர் 3-ந் தேதி நடத்திய சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனைக்குப் பிறகு இதை நிகழ்த்தியது.

இதன்மூலம் 7-ஆவது முறையாக நடந்த இந்தப் புதிய ஏவுகணைச் சோதனையில் சுமார் 2,300 மைல்கள் வரை சென்று தாக்கக் கூடிய வல்லமைப் பெற்றதாக அமைந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கௌன்சில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்தப் புதிய ஏவுகணைச் சோதனையை வடகொரியா நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2011-ம் ஆண்டு தற்போதைய வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் பதவியேற்றதுடன் இதுவரை அந்நாடு சுமார் 80 அணுஆயுதங்களை சோதனை செய்துள்ளது.

உலக நாடுகளின் கண்டனங்களுக்கு மத்தியில் வடகொரியா இதுபோன்ற சம்பவங்களை நிகழ்த்தி வருவது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com