இம்ரான் கானை கைது செய்ய பாக்., தேர்தல் ஆணையம் உத்தரவு

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் அரசியல் கட்சித் தலைவருமான இம்ரான் கானை கைது செய்ய அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமைஉத்தரவிட்டது.
இம்ரான் கானை கைது செய்ய பாக்., தேர்தல் ஆணையம் உத்தரவு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத சக்தியாகவும், உலக கிரிக்கெட் அரங்கில் நட்சத்திர வீரராகவும் திகழ்ந்தவர் இம்ரான் கான். 

ஆல்-ரவுண்டரான இவர் கடந்த 1996-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணிக்கு பெற்றுத் தந்தவர். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானில் தேரீக்-இ-இன்ஸப் என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், குற்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக இம்ரான் கானை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

முன்னதாக, சட்டவிரேதமாக வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்தில் இம்ரான் கான் ஈடுபட்டுவருவதாக அவரது அரசியல் கட்சியின் தலைவர் அக்பர்.எஸ்.பாபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆகஸ்ட் 24-ந் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, போதிய ஆதாரங்களை சமர்பிக்கத் தவறியது தொடர்பாகவும், தேர்தல் ஆணையத்தை அவமித்த விவகாரத்திலும் இம்ரான் கானை கைது செய்ய உத்தரவிடப்பட்டது.

ஆனால், தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக செயல்படுவதாக இம்ரான் கான் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தேர்தல் ஆணையத்தின் மீது இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார். இதனை விசாரித்த 3 பேர் அமர்வு செப்டம்பர் 20-ந் தேதி வரை வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது. 

இந்த விவகாரத்தில் இம்ரான் கான் உடனடியாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பை கோர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், முன் ஜாமின் பெற்றால் இம்ரான் கான் இந்த கைது நடவடிக்கையில் இருந்து தப்ப முடியும் என்ற நிலைமை உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com