நவாஸ் ஷெரீஃப் தகுதி நீக்கத் தீர்ப்பு மறு ஆய்வு மனு: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

நவாஸ் ஷெரீஃபை தகுதி நீக்கம் செய்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை அந்த நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

நவாஸ் ஷெரீஃபை தகுதி நீக்கம் செய்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை அந்த நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
பனாமா ஆவணங்கள் கசிவைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வெளிநாடுகளில் சொத்து இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. புகார்கள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது. அந்தக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் நவாஸ் ஷெரீஃபை தகுதி நீக்கம் செய்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் தனது பிரதமர் பதவியையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்தார். இந்த நிலையில், அந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது, நவாஸ் ஷெரீஃபின் மறு ஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதி ஆசிப் சயீத் கோசா தெரிவித்தார். அதற்கான காரணங்கள் பின்னர் வெளியிடவுள்ள விரிவான உத்தரவில் தெரிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஜூலையில் வெளியான தீர்ப்பில், நவாஸ் ஷெரீஃப் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் மீதான மற்றொரு மேல் முறையீட்டு மனு விசாரணையின்போது, நவாஸின் வழக்குரைஞர் தனது கட்சிக்காரருக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று முறையிட்டார்.
"அந்தத் தீர்ப்பில் நவாஸ் ஷெரீஃபை கடுமையான சொற்களால் உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது. இதனால் அவருக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் விசாரணை நீதிமன்றத்தில் அவருக்கு நியாயம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது' என்று வழக்குரைஞர் காஜா ஹாரிஸ் குறிப்பிட்டார்.
அப்போது நீதிபதி ஆசிப் சயீத் கோசா தெரிவித்தது: ஒரு உத்தரவு எதிராக வந்ததால் உங்கள் கட்சிக்காரர் சோர்வடைந்துவிடக் கூடாது. பொறுமையாக இருங்கள். இதற்கு முன்னர் அவர் இக்கட்டில் சிக்கியபோது இந்த நீதிமன்றம் அவருக்குத் துணை நின்று உதவியிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com