வட கொரியா ஏவுகணை சோதனை: ஜப்பான் கடும் கண்டனம்

வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனைக்கு ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே கடும் கண்டனம் தெரிவித்தார்.

வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனைக்கு ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே கடும் கண்டனம் தெரிவித்தார்.

தலைநகர் டோக்கியோவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வட கொரியாவின் செயல் ஏற்றுக் கொள்ள முடியாதது. மிகவும் ஆபத்தான நடவடிக்கையை அந்த நாடு மேற்கொண்டுள்ளது. பதற்றத்தைத் தூண்டும் இந்தச் செயல் உலக அமைதிக்கே மிரட்டல் விடுப்பதாக உள்ளது என்றார்.
அந்த ஏவுகணை செலுத்தப்பட்டு ஜப்பான் வான் எல்லையை அடைந்ததும் ஜப்பானின் ஹொக்கைடோ தீவு நகரான எரிமோவிலிருந்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. "வட கொரியாவிலிருந்து ஏவுகணை செலுத்தப்பட்டுள்ளது' என்று தொடர்ந்து ஒலிபெருக்கியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அந்த நடுத்தர ரக ஏவுகணை ஜப்பான் வான் எல்லைப் பகுதியைக் கடக்க சுமார் 2 நிமிடங்கள் ஆயிற்று.
காலை நேரத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின்போது ஏவுகணை சோதனை தகவல் வெளியானது. அனைத்து சேனல்களிலும் நிகழ்ச்சிக்கு இடையே "ஏவுகணை அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது' என்றும் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் அறிவிப்பாளர்கள் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com