லண்டன் சுரங்க ரயில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய மற்றொரு இளைஞர் கைது

தென்மேற்கு லண்டனில் உள்ள பார்ஸன் கிரீன் சுரங்க ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.20 மணிக்கு ( இந்திய நேரப்படி பிற்பகல்
லண்டன் சுரங்க ரயில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய மற்றொரு இளைஞர் கைது

லண்டன்: தென்மேற்கு லண்டனில் உள்ள பார்ஸன் கிரீன் சுரங்க ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.20 மணிக்கு ( இந்திய நேரப்படி பிற்பகல் 1.50 மணி) இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. சுரங்க ரயிலின் ஒரு பெட்டியில் பெரிய வெள்ளைநிற பக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. அப்போது ஏற்பட்ட நெருப்பால் ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் 30 பேர் காயமடைந்தனர். சில பயணிகளுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது; ரயில் பெட்டியை விட்டு வேகமாக வெளியேற முயன்றபோது கூட்டநெரிசலில் சிக்கியும் பலர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த குண்டு வெடிப்பையடுத்து மெட்ரோ சுரங்க ரயில் சேவை தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் பாதுகாப்பு கருதி ரயில் நிலையத்திலிருந்த பொதுமக்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த குண்டு வெடிப்பையடுத்து மெட்ரோ சுரங்க ரயில் சேவை தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எந்த வகையான குண்டு வெடித்தது என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை. வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்புப் படை வீரர்கள் உள்ளிட்டோர் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த குண்டுவெடிப்புக்கு பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது, இதன் துணை அமைப்பொன்று இந்த குண்டு வெடிப்பை ஏற்பாடு செய்ததாக அது தெரிவித்தது. சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் இங்கிலாந்தின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள டோவர் என்ற இடத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞன் ஒருவனை போலீஸார் கைது செய்தனர். அவனை ரகசிய இடங்களில் வைத்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து லண்டனுக்கு வெளியில் உள்ள ஒரு சிறிய நகரமான சன்ஸ்பரியில் உள்ள அவருக்கு தொடர்பான இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், சில குண்டுவெடிப்பு தொடர்பான கருவிகளும் பறிமுதல்செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மேற்கு லண்டன் புறநகரான ஹவுன்ஸ்லோவில் இருந்த இந்த 21 வயதுடைய இளைஞரும் வெடிகுண்டு தாக்குதலோடு தொடர்புள்ளராக சந்தேகிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரை நேற்று சனிக்கிழமை (செப்.16) நள்ளிரவுக்கு முன்னர் லண்டன் மாநகர போலீஸாரால் இங்கிலாந்து நாட்டின் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் தெற்கு லண்டன் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக போலீஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com