அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தயார்

வட கொரியாவின் அச்சுறுத்தல்களை அமெரிக்கா எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
அமெரிக்க விமானப் படையின் 70-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசும் அதிபர் டிரம்ப்.
அமெரிக்க விமானப் படையின் 70-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசும் அதிபர் டிரம்ப்.

வட கொரியாவின் அச்சுறுத்தல்களை அமெரிக்கா எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
அமெரிக்க விமானப் படையின் 70-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் தலைநகர் வாஷிங்டன் அருகே அமைந்துள்ள ஆண்ட்ரூஸ் விமானதளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை அதிபர் மைக் பென்ஸ், பாதுகாப்புப் படையின்மூத்த அதிகாரிகள், விமானப் படை வீரர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அணு ஆயுதம் ஏந்தி தாக்குதல் நிகழ்த்தும் திறன் கொண்ட அதிநவீன பி-52 போர் விமானத்தின் முன்பாக நின்று டிரம்ப் பேசியது:
நமது நாட்டையும் மக்களையும், நமது நட்பு நாடுகளையும் மட்டுமல்லாமல், மனித குலம் முழுவதையும் பாதுகாக்கும் திறன் அமெரிக்காவுக்கு உள்ளது. வட கொரியா உள்பட யார் அச்சுறுத்தினாலும் அவர்களைத் திணறடிக்கும் வல்லமையுடன் தயார் நிலையில் அமெரிக்கா உள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் டிரம்ப் மனைவி மெலானியாவும் கலந்து கொண்டார்.
முன்னதாக, வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்.ஆர். மெக்மாஸ்டர் கூறியது: 
அமெரிக்க முப்படைகளும் போர் ஆயத்த நிலையில் உள்ளன. போருக்குத் தயாரான மன நிலையில் அமெரிக்கா இல்லை என்று கூறப்படுவது உண்மையில்லை. போர் என்ற நிலை எழுந்தால் அமெரிக்கா அதற்கான உறுதியுடன் உள்ளது. ஆனால் அதுதான் வழிமுறையா என்பதுதான் கேள்வி. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது உள்பட உலக நாடுகள் இந்த விவகாரத்தில் தீவிரமாக தலையிட்டு செயல்பட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com