ட்ரம்ப்பின் மிரட்டல் நாய் குரைப்பதைப் போன்றது: வடகொரிய அமைச்சர் கிண்டல்!

வடகொரியாவை மொத்தமாக அழித்து விடுவோம் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மிரட்டல் நாய் குரைப்பதைப் போன்றது என்று வடகொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரி யாங் ஹோ தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் மிரட்டல் நாய் குரைப்பதைப் போன்றது: வடகொரிய அமைச்சர் கிண்டல்!

நியூயார்க்: வடகொரியாவை மொத்தமாக அழித்து விடுவோம் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மிரட்டல் நாய் குரைப்பதைப் போன்றது என்று வடகொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரி யாங் ஹோ தெரிவித்துள்ளார்.

வடகொரியா சமீபமாக பல்வேறு ஏவுகணை சோதனைளையும் அணு ஆயுத சோதனைகளையும் தொடர்ந்து நடத்திவருகிறது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் இதன் காரணமாக அமெரிக்காவும், ஐநா சபையும் வடகொரியா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. இவற்றின் விளைவாக கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஐநா சபையின் பொதுச் சபை கூட்டம் நடைபெற்று  வருகிறது. இதில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த செவ்வாயன்று பேசும் பொழுது, 'அமெரிக்கா வலிமையையும் பொறுமையும் நிறைந்த ஒரு நாடு; ஆனால் எங்களுக்கோ அல்லது எங்கள் நட்பு நாடுகளுக்கோ தொல்லை கொடுப்பதன் மூலம், வடகொரியா அதனை தொடர்ந்து சோதித்துக் கொண்டே இருந்தால், வடகொரியாவை மொத்தமாக அழிப்பதனைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை' என்று தெரிவித்தார்.

ட்ரம்பின் இந்த உரையின் பொழுது வடகொரியப் பிரதிநிதிகள் யாரும் அவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.              

இந்நிலையில் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள வடகொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரி யாங் ஹோ நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது ட்ரம்ப்பின் உரை குறித்து அவரிடம் கேட்கப்பட்ட பொழுது, 'இப்படி எல்லாம் நாய் குரைப்பது போன்று பேசுவதன் மூலம் எங்களை பயமுறுத்தலாம் என்று ட்ரம்ப் எண்ணினால் அது வெறும் நாய் கனவுதான்' என்று தெரிவித்தார்.

வடகொரியாவினைப் பொறுத்த வரை நாய் கனவு என்பது அபத்தம் மற்றும் பொருள் இல்லாத ஒன்றை பற்றிக் குறிப்பிடும் வார்த்தையாகும் என்பது  கவனிக்கத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com