அட்லாண்டிக் பெருங்கடலில் அரிய வகை 'சுறா' வேட்டையாடும் விடியோ

அட்லாண்டிக் பெங்கடலில் அரிய வகை சுறா மீன் கூட்டம் ஒன்று மீன்களை வேட்டையாடும் அற்புத விடியோ ஒன்று வெளியானது.
அட்லாண்டிக் பெருங்கடலில் அரிய வகை 'சுறா' வேட்டையாடும் விடியோ

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் கடற்பகுதியான ஹேம்ப்டன்ஸ் என்ற இடத்தில் அரிய வகை சுறாக்கள் வேட்டையாடும் நிகழ்வு படமாக்கப்பட்டுள்ளது.

ஹேம்ப்டன்ஸ் கடற்பகுதி பிரபல சுற்றுலாத்தலமாகத் திகழ்கிறது. இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் விடுமுறை தினங்களில் குவிகின்றனர். மேலும், வெளிநாட்டு சுற்றுலா வாசிகளும் இங்கு வருகை தருகின்றனர்.

அதுபோன்ற ஒரு தருணத்தில் அரிய வகை சுறாக்கள் வேட்டையாடும் விடியோ ஒன்றை சுற்றுலாப் பயணி ஒருவர் பதிவுசெய்துள்ளார். இது பார்ப்பதற்கு ஒரு திகில் பட அனுபவத்தை தருகிறது. ஷார்க் அட்டாக், ஜாஸ் திரைப்பட ரசிகர்களுக்கு இச்சம்பவம் நன்றாகத் தெரியும்.

நன்றி: நேஷனல் ஜியோகிராஃபிக்

அந்த விடியோவில் நியூயார்க் கடற்பகுதியில் காணப்படும் அரிய வகை சாண்ட்பார் அல்லது டஸ்கி வகை சுறாக்கூட்டம் ஒன்று கும்பலாக வாழக்கூடிய மென்ஹாட்டன் ரக மீன்களை வேட்டையாடுகிறது. 

இந்த மென்ஹாட்டன் ரக மீன்கள் அதிகளவில் காணப்படும் போது இதனால் கவரப்படும் சுறாக்கள் கும்பலாக வேட்டையாட வருவது வழக்கம் என கடல் ஆராய்ச்சியாளர் கிரேகோரி ஸோமல் என்பவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com