பப்புவா நியூ கினியாவில் செவ்வாய்க்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: பப்புவா நியூ கினியாவின் கோகோபோ நகரிலிருந்து 210 கி.மீ. தொலைவில் செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈஸ்ட் நியூ பிரிட்டன் மாகாணத்தையடுத்த கடல் பகுதியில், 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.0 அலகுகளாகப் பதிவானதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று ஹவாயைச் சேர்ந்த பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது.