பாகிஸ்தானில் புறக்கணிக்கப்படும் ரோஹிங்யா இஸ்லாமியர்கள்

பாகிஸ்தானில் தஞ்சமைடந்த ரோஹிங்யா இஸ்லாமியர்கள் புறக்கணிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால், பாகிஸ்தான் அரசோ... 
பாகிஸ்தானில் புறக்கணிக்கப்படும் ரோஹிங்யா இஸ்லாமியர்கள்

இன்று ஆசிய கண்டங்களில் மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது ரோஹிங்யா விவகாரம். பௌத்த ஆதிக்கம் நிறைந்த மியான்மர் தேசத்தில் பாரம்பரியமிக்க சிறுபான்மையினராக ரோஹிங்யா இன இஸ்லாமியர்கள் உள்ளனர்.

மியான்மர் தங்களின் பூர்வீக நாடு என்றாலும் அவர்களுக்கு அங்கு போதுமான தேவைகள் எதுவும் அந்நாட்டு அரசால் பூர்த்தி செய்யப்படவில்லை. மேலும், தொடர் புறக்கணிப்புகளுக்கும் ஆளாகினர்.

சமீபத்தில் மியான்மர் நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் மீது ரோஹிங்யா இஸ்லாமியர்கள் கடும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு வசிக்கும் இருபிரிவினருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. 

இதன்காரணமாக 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். குறிப்பாக வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா மற்றும் அரபு நாடுகளில் குடியேறி வருகின்றனர்.

ரோஹிங்யா இஸ்லாமியர்கள் என்ற பெயரில் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்விவகாரத்தில் இந்தியா மனிதாபிமானமற்ற முறையில் செயல்படுவதாக பாகிஸ்தான் விமர்சனம் செய்தது. 

இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள சுமார் 40,000 ஆயிரம் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் தொடர்ந்து பறக்கணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பாகிஸ்தானில் குடியேறி வசித்து வந்தாலும், வங்காள மொழி பேசுவதால் தங்கள் குடும்பத்தினரை பாகிஸ்தானியர்களாக ஏற்க மறுப்பதாக ரோஹிங்யா இஸ்லாமியர்கள் தெரிவித்துள்ளனர். 

அகதிகள் முகாம்களில் எவ்வித அடிப்படை வசதிகளும் இதுவரை ஏற்படுத்தவில்லை. 10 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசித்து வந்தாலும் எங்களை இஸ்லாமியர்களாக ஏற்க மறுக்கின்றனர்.

குறிப்பாக பாகிஸ்தான் குடிமகனாக ஏற்பதில்லை. நாங்கள் இன்னும் புறக்கணிக்கப்பட்டு கொண்டு இருக்கிறோம் என்று கராச்சியில் உள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்களில் ஒருவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com