அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விழுந்து விபத்து: 257 வீரர்கள் பலி! 

அல்ஜீரிய தலைநகர் அல்ஜிர்ஸ் அருகே ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 257 வீரர்கள் பலியாகியுள்ளனர்.
அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விழுந்து விபத்து: 257 வீரர்கள் பலி! 

அல்ஜிர்ஸ்: அல்ஜீரிய தலைநகர் அல்ஜிர்ஸ் அருகே ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 257 வீரர்கள் பலியாகியுள்ளனர்.

அல்ஜீரிய தலைநகர் அல்ஜிர்ஸ் அருகே உள்ளது பௌபரிக் ராணுவத் தளம். இங்கிருந்து புதனன்று ராணுவ வீரர்களை ஏற்றுக் கொண்டு II-76 வகை ராணுவ விமானமொன்று, நாட்டின் தென் மேற்கு பகுதியில் உள்ள பேச்சர் ராணுவத் தளத்துக்கு புறப்பட்டது.

ஆனால் புறப்பட்ட சிறிது நிமிடங்களிலேயே அந்த விமானமானது அருகில் உள்ள வயல்வெளி ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து ஆம்புலன்ஸ்கள் மற்றும் செம்பிறை அமைப்பின் தன்னார்வலர்கள் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியே புகைமூட்டமாக காணப்படுகிறது.

இதுதொடர்பாக சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித்தொடர்பாளர் முஹம்மது அகூர் கூறியதாவது:

அந்த விமானத்தில் முழுக்கவே ராணுவ வீரர்கள் பயணம் செய்தார்கள். கண்டிப்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளார்கள். சரியான எண்ணிக்கை எவ்வளவு என்று இப்போது கூற முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எத்தனை பேர் மரணமடைந்துள்ளார்கள் என்ற விபரத்தை பாதுகாப்புத்துறை வெளியிடவில்லை. ஆனால் மரணமடைந்துள்ள வீரர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com