கொலை வழக்கு: 36 ஆண்டுகளுக்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்றம்

அமெரிக்காவில் கொலைக் குற்றத்துக்காக 36 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவருக்கு மரண தண்டனை
கைது செய்யப்பட்டபோதும், அண்மைக் காலத்திலும் டேவிட் மில்லர்.
கைது செய்யப்பட்டபோதும், அண்மைக் காலத்திலும் டேவிட் மில்லர்.


அமெரிக்காவில் கொலைக் குற்றத்துக்காக 36 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
டேவிட் ஏர்ல் மில்லர் (61) என்ற அந்த நபருக்கு, டென்னஸீ மாகாணத் தலைநகர் நாஷ்வில் சிறையில் மின்சார நாற்காலி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட அவருக்கு, 36 ஆண்டுகள் கழித்து அந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் சர்ச்சையே ஏற்படுத்தியுள்ளது.
இவ்வளவு நீண்ட காலம் கழித்து மரண தண்டனை நிறைவேற்றப்படுவதால் மக்களின் வரிப் பணம் வீணாவதோடு, கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர், மரண தண்டனை விதிக்கப்பட்டவர் ஆகிய இரு தரப்பினருக்குமே அது கொடுமையான மன உளைச்சலைத் தரும் என்று மனித உரிமை அமைப்பினர் குற்றம் சாட்டினர்.
ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அமெரிக்காவில் மின்சார நாற்காலி மூலம் மரண தண்டனை விதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com