டிரம்ப் பட்ஜெட்டுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

பல மணி நேர இழுபறிக்குப் பிறகு, அரசு செலவுகளுக்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இடைக்கால பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றம் வியாழக்கிழமை நள்ளிரவு ஒப்புதல் அளித்தது.
டிரம்ப் பட்ஜெட்டுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

பல மணி நேர இழுபறிக்குப் பிறகு, அரசு செலவுகளுக்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இடைக்கால பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றம் வியாழக்கிழமை நள்ளிரவு ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, 3 வாரங்களுக்குள் நாட்டின் அரசுத் துறைகள் மீண்டும் முடக்கப்படுவதற்கான அபாயம் நீங்கியது.
அமெரிக்காவில், வரும் மார்ச் மாதம் 23-ஆம் தேதி வரையிலான அரசுச் செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அனுமதி கோரும் மசோதா, அந்த நாட்டு நாடாளுமன்ற மேலவையான செனட் சபையில் வியாழக்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
எனினும், அந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக அளிக்கப்பட்டிருந்த கெடு நேரமான நள்ளிரவு 12.00 மணி வரை ஆளும் குடியரசுக் கட்சி எம்.பி.க்களுக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே இதுதொடர்பான உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடித்து வந்தது.
இதையடுத்து, அரசுத் துறைகளை நடத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்க முடியாத நிலையில், அந்தத் துறைகளை முடக்குவதற்கான சூழல் ஏற்பட்டது. கடந்த 3 வாரங்களுக்கு முன்புதான் இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததால் அரசுத் துறைகள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பட்ஜெட் மசோதாவுக்கு ஆதரவாக 240 வாக்குகளும், எதிராக 186 வாக்குகளும் பதிவானது.
இதனைத் தொடர்ந்து, அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கையெழுத்துக்காக அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
ஆப்பிரிக்கா மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களைத் திருப்பி அனுப்பாமல் தடுக்கும் வகையிலான சட்டம் முன்னாள் அதிபர் ஒபாமா காலத்தில் இயற்றப்பட்டிருந்தது. அந்தச் சட்டத்தை அண்மையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்தார்.
இதனால் ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகள், அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், குடியேற்றவாசிகள் வெளியேற்றப்படுவதைத் தவிர்த்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் முயற்சியில் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் டிரம்ப்புக்கு நிர்பந்தம் கொடுக்கும் முயற்சியாகவே, இடைக்கால பட்ஜெட் மசோதாவுக்கு எம்.பி.க்கள் நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com