ரஷிய விமான விபத்து: 71 பேர் பலி

ரஷிய பயணிகள் விமானம் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 71 பேரும் பலியாகிவிட்டனர். இவ்விபத்தில் பலியானவர்களுக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஏஎன்-148 ரக விமானம் (கோப்புப் படம்)
ஏஎன்-148 ரக விமானம் (கோப்புப் படம்)

ரஷிய பயணிகள் விமானம் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 71 பேரும் பலியாகிவிட்டனர். இவ்விபத்தில் பலியானவர்களுக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சரடோவ் ஏர்லைன்ஸýக்கு சொந்தமான ஆன்டோநவ் ஏஎன்-148 ரக விமானம், டொமோடிடோவோ விமான நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஓர்ஸ்க் நகரை நோக்கி சென்ற அந்த விமானம், மாஸ்கோ புறநகர் பகுதியான ராமென்ஸ்கை மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து நொறுங்கியது. வானில் பறந்தபோதே அந்த விமானம் தீப்பிடித்து கீழே விழுந்ததாக அப்பகுதியிலிருந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். 
இந்த விமானத்தில், 65 பயணிகளும், 6 விமான சிப்பந்திகளும் இருந்தனர். அவர்கள் அனைவரும் இந்த விபத்தில் பலியாகி விட்டதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் நொறுங்கி விழுந்த இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 150 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com