ரயில் நிலையத்தில் கைப்பையுடன் எக்ஸ்-ரே கருவிக்குள் நுழைந்த சீனப் பெண்!

சீனாவின் ரயில் நிலையம் ஒன்றில் பயணிகளின் உடைமைகளைச் சோதிப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் எக்ஸ் - ரே கருவிக்குள் இளம்பெண் ஒருவர் ஊடுருவிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் முக்கியச்

சீனாவின் ரயில் நிலையம் ஒன்றில் பயணிகளின் உடைமைகளைச் சோதிப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் எக்ஸ் - ரே கருவிக்குள் இளம்பெண் ஒருவர் ஊடுருவிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் முக்கியச் செய்தியாக மாறியுள்ளது. தனது கைப் பைக்குள் இருந்த பணத்தை எவரேனும் திருடி விடக்கூடும் என்ற அச்சத்தில் அதனுடன் அப்பெண்ணும் பரிசோதனைக் கருவிக்குள் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
உடல் நலனைக் காட்டிலும், பணத்துக்கு அதிக முக்கியத்துவம் தந்த அப்பெண்ணை பலரும் விமர்சித்து வருகின்றனர். சீனாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள டான்குவான் ரயில் நிலையத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இளம் பெண் ஒருவர் சென்றார். அங்கு பயணிகளின் உடைமைகளானது எக்ஸ் - ரே பரிசோதனைக் கருவி மூலம் சோதிக்கப்படும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
அதன்படி, அக்கருவியின் ஒருபுறத்தில் உள்ள நகரும் பெல்ட்டின் மீது பைகள் உள்ளிட்ட உடைமைகளை வைத்தால், அது மெல்ல நகர்ந்து மறுபுறத்துக்குச் செல்லும். அதற்கு இடையே உள்ள நவீன கண்காணிப்புப் பகுதிக்கு பைகள் சென்றவுடன் அதற்குள் என்ன இருக்கின்றது? என்பது எக்ஸ்-ரே முறையில் சோதனை செய்யப்படும்.
இந்நிலையில் அந்த இளம்பெண்ணின் கைப் பையை பரிசோதனைக் கருவியில் வைக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அப்போது பையைத் தனியே அனுப்ப மனமில்லாமல் அவரும் அந்த நகரும் பெல்ட்டில் அமர்ந்து கொண்டார். எக்ஸ் - ரே பகுதிக்கு வந்தபோது அந்தப் பெண்ணின் உருவமும் கணினியில் தெரிந்ததையடுத்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பரிசோதனைக் கருவியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
இதுதொடர்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியுள்ளது. இரு நாள்களுக்குள் அந்த விடியோவை 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com