சிரியா கூட்டுப் படையிலிருந்து குர்துக்களை நீக்க வேண்டும்: அமெரிக்காவிடம் துருக்கி வலியுறுத்தல்

சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா உருவாக்கியுள்ள கூட்டுப் படையிலிருந்து குர்துப் படையினரை நீக்க வேண்டும் என்று துருக்கி வலியுறுத்தியுள்ளது.

சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா உருவாக்கியுள்ள கூட்டுப் படையிலிருந்து குர்துப் படையினரை நீக்க வேண்டும் என்று துருக்கி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் நியூரெடின் கானிக்லி வியாழக்கிழமை கூறியதாவது: சிரியாவில் உள்ள 'ஒய்ஜிபி' குர்துப் படையினருக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவு, துருக்கியிலுள்ள குர்து கிளர்ச்சியாளர்கள் தங்கள் பலத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு உதவுகிறது. இது, துருக்கியின் தேசியப் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும்.
எனவே, சிரியா குர்துக்களுக்கு அளித்து வரும் உதவிகளை நிறுத்துமாறு அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸிடம் வலியுறுத்தியுள்ளேன்.
சிரியாவின் ஒய்பிஜி குர்துப் படையினருக்கும், துருக்கியின் குர்து கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை ஜேம்ஸ் மேட்டிஸிடம் சமர்ப்பித்தேன் என்றார் அவர்.
தனது நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் குர்து அமைப்பினருக்கு, சிரியாவிலுள்ள ஒய்பிஜி குர்துப் படையினர் ஆதரவளிப்பதாக துருக்கி குற்றம் சாட்டி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com