இந்திய ராணுவ முகாம் தகர்ப்பு; 5 வீரர்கள் சாவு: பாகிஸ்தான்

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இருந்த இந்திய ராணுவத்தின் முகாம் ஒன்றை தகர்த்து விட்டதாகவும், இதில் 5 இந்திய வீரர்கள் உயிரிழந்து விட்டதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இருந்த இந்திய ராணுவத்தின் முகாம் ஒன்றை தகர்த்து விட்டதாகவும், இதில் 5 இந்திய வீரர்கள் உயிரிழந்து விட்டதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளரான மேஜர் ஜெனரல் ஆசிப் கபார், சுட்டுரையில் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
டாட்டா பானி செக்டாரில் இருந்த இந்திய ராணுவத்தினர், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தனர். இதையடுத்து, இந்திய ராணுவத்தினரின் அந்த முகாம் மீது பாகிஸ்தான் தாக்கி அழித்தது. இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் உயிரிழந்து விட்டனர்; ஏராளமானோர் காயமடைந்தனர்.
அப்பாவி மக்கள் மீதான இந்திய ராணுவத்தின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு விட்டது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பதிவுகளுடன் சேர்த்து, இந்திய ராணுவ முகாம் தகர்க்கப்பட்டது தொடர்பான விடியோ பதிவையும் சுட்டுரையில் ஆசிப் கபார் பகிர்ந்து கொண்டிருந்தார்.
இந்தியா மறுப்பு: இதனிடையே, தில்லியில் இருக்கும் இந்திய ராணுவ மூத்த அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் தரப்பால் இந்திய ராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட செய்தியை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "அது அடிப்படை முகாந்திரமில்லாதது' என்றார்.
முன்னதாக, இஸ்லாமாபாதில் இருக்கும் இந்திய துணைத் தூதர் ஜே.பி. சிங்கை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அதிகாரி சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்தார். 
அப்போது ஜே.பி. சிங்கிடம், பள்ளி குழந்தைகள் சென்ற வேன் மீது இந்திய ராணுவம் நடத்தியத் தாக்கு
தலில் ஓட்டுநர் இறந்து விட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com