யேமன் விவகாரத்தில் மாறுபட்ட நிலைப்பாடு: சவூதிக்கு ராணுவத்தை அனுப்புகிறது பாகிஸ்தான்

சவூதி அரேபியாவில் பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக தனது ராணுவ அதிகாரிகளைக் கூடுதலாக அனுப்ப பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

சவூதி அரேபியாவில் பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக தனது ராணுவ அதிகாரிகளைக் கூடுதலாக அனுப்ப பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், யேமன் உள்நாட்டுச் சண்டையில் சவூதி தலையிட்டதைத் தொடர்ந்து அந்த நாட்டுக்குப் படையினரை அனுப்புவதை நிறுத்தி வைத்திருந்த பாகிஸ்தான், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரிலுள்ள ராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தானுக்கும், சவூதி அரேபியாவுக்கும் இடையே தொடர்ந்து நிலவி வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, சவூதிக்கு ராணுவ அதிகாரிகள் குழுவை அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
அந்த நாட்டு ராணுவத்தினருக்கு பயிற்சி மற்றும் போர் ஆலோசனைகளை வழங்கும் பணிகளை மட்டுமே பாகிஸ்தான் ராணுவத்தினர் மேற்கொள்வர்.
சவூதி அரேபியா தவிர அவர்கள் வேறு எங்கும் பணி செய்ய அனுப்பப்பட மாட்டார்கள்.
சவூதி மட்டுமின்றி, வளைகுடா மற்றும் பிற மண்டல நாடுகளுடன் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை பாகிஸ்தான் மேம்படுத்தி வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, சவூதி அரேபியாவில் 1,000 பாகிஸ்தான் ராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தற்போது அனுப்பப்படும் அதிகாரிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
யேமனில் நடைபெறும் உள்நாட்டுச் சண்டையில் சன்னி பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட அரசுப் படைகளுக்கு ஆதரவாக சன்னி நாடான சவூதி அரேபியா கடந்த 2015-ஆம் ஆண்டு களமிறங்கியது. 
இதற்காக, வளைகுடாவைச் சேர்ந்த பல்வேறு நாடுகளையும் தனது கூட்டணியில் இணைத்துக் கொண்டது.
மேலும், மற்றொரு சன்னி நாடான பாகிஸ்தானும் தங்களது கூட்டுப் படையில் இணைய வேண்டும் என்று சவூதி அரேபியா வலியுறுத்தியது. எனினும், நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது என்று கூறி, பாகிஸ்தான் அதற்கு மறுத்துவிட்டது.
இந்தச் சூழலில், பாகிஸ்ôன் ராணுவ தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீஃப் இந்த மாதத் தொடக்கத்தில் சவூதி அரேபியாவில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
அங்கு மன்னர் முகமது பின் சல்மான் மற்றும் சவூதி ராணுவ தலைமைத் தளபதி இளவரசர் பஹத் பின் துர்கி ஆகியரைச் சந்தித்துப் பேசினார். ரஹீல் ஷெரீஃப் சவூதி அரேபியா சென்றது கடந்த 2 மாதங்களில் அது இரண்டாவது முறையாகும்.
இந்த சுற்றுப் பயணங்களின் விளைவாகவே சவூதி அரேபியாவுக்கு கூடுதல் படையினரை அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ராணுவத்தின் இந்த முடிவால், யேமன் விவகாரத்தில் தலையிடுவதில்லை என்று நாடாளுமன்றத்தில் உறுதிமொழி அளித்த பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் உருவாகலாம் என்று கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com