ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஏவுகணை வழங்கிய விவகாரம்: ஈரான் மீது ஐ.நா. நடவடிக்கை

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஏவுகணைகளை அளித்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதால், அந்த நாட்டுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஏவுகணை வழங்கிய விவகாரம்: ஈரான் மீது ஐ.நா. நடவடிக்கை

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஏவுகணைகளை அளித்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதால், அந்த நாட்டுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
யேமனில் சன்னிப் பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட அரசுப் படைகளுக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வருகிறது.
அந்தச் சண்டையில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக, கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி அரேபியா தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.
இதற்குப் பதிலடியாக, சவூதி அரேபியா மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசினர். அந்த ஏவுகணைகளை ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் வழங்கியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், யேமன் கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவை நோக்கி வீசிய ஏவுகணைகள் ஈரானில் தயாரிக்கப்பட்டவையா என்பது குறித்து முடிவு செய்ய, அந்த ஏவுகணைகளின் சிதறிய பாகங்களை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் குழு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், யேமனில் வீசப்பட்ட ஏவுகணைகள் ஈரானில் தயாரிக்கப்பட்டவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐ.நா.வில் அந்த அமைப்புக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி கூறியதாவது:
சவூதியில் வீசப்பட்ட ஏவுகணைகள் குறித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிபுணர் குழுவின் அறிக்கை, கவுன்சிலின் பல்வேறு ஆயுதப் பரவல் தடை தீர்மானங்களை ஈரான் மீறியுள்ளது என்பதை நிரூபித்துள்ளது. இதைத்தான் நாங்கள் பல மாதங்களாகக் கூறி வருகிறோம்.
இதுபோன்ற தடைமீறல்களை உலகம் இனியும் பொறுத்துக்கொள்ளக் கூடாது. எனவே, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை சட்டவிரோதமாக விநியோகித்துள்ள ஈரான் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com