டிரம்ப்பின் கருத்து எதிரொலி: அமெரிக்கத் தூதரிடம் பாக். ஆட்சேபம்

பாகிஸ்தான் பொய் சொல்லி தங்களை ஏமாற்றுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ள கருத்துக்கு ஆட்சேபம் தெரிவிப்பதற்காக அமெரிக்கத் தூதர் டேவிட் ஹாலேவுக்கு பாகிஸ்தான் அரசு

பாகிஸ்தான் பொய் சொல்லி தங்களை ஏமாற்றுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ள கருத்துக்கு ஆட்சேபம் தெரிவிப்பதற்காக அமெரிக்கத் தூதர் டேவிட் ஹாலேவுக்கு பாகிஸ்தான் அரசு சம்மன் அனுப்பி வரவழைத்தது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி டுவிட்டர் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் 'அமெரிக்கா கடந்த 15 ஆண்டுகளாக அளித்து வரும் நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளும் பாகிஸ்தான் அதற்குப் பதிலாக எதையும் செய்வதில்லை. பொய்களைக் கூறி ஏமாற்றி வருவதோடு பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடங்களை அளித்து வருகிறது' என்று கோபத்துடன் கருத்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, டிரம்ப்பின் கருத்துக்கு ஆட்சேபம் இஸ்லாமாபாதில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தங்கள் நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் ஹாலேவை திங்கள்கிழமை இரவு சம்மன் அனுப்பி வரவழைத்தது.
அப்போது, டிரம்ப்பின் கருத்து தொடர்பாக விளக்கமளிக்குமாறு ஹாலேவிடம் பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் தெஹ்மினா ஜஞ்சுவா கோரியதாக பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் 'தி எக்ஸ்பிரஸ் டிரிப்யூன்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com