பிப்.8-இல் தேர்தல்: நேபாள அமைச்சரவை பரிந்துரை

நோபாள நாடாளுமன்ற மேலவைக்கு அடுத்த மாதம் 8-ஆம் தேதி தேர்தல் நடத்த அந்த நாட்டு மத்திய அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது.

நோபாள நாடாளுமன்ற மேலவைக்கு அடுத்த மாதம் 8-ஆம் தேதி தேர்தல் நடத்த அந்த நாட்டு மத்திய அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது.
இதையடுத்து, அண்மையில் நாடாளுமன்ற மற்றும் மாகாணத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள அந்த நாட்டில், புதிய அரசு அமைவதற்கான வழி ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் ஷேர் பகதூர் தேவுபா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையர் அயோதி பிரசாத் யாதவைச் சந்தித்து, பிப்ரவரி 8-ஆம் தேதி மேலவைத் தேர்தல் நடத்தலாம் என்று பிரதமர் ஷேர் பகதூர் பரிந்துரைத்தார்.
அந்தத் தேதியில் தேர்தல் நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் தேர்தல் ஆணையரிடம் கூறினார்.
நாடாளுமன்ற மேலவைக்கு உள்ள 59 இடங்களில், 56 உறுப்பினர்களை மாகாண பேரவைத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் 753 பேர் உள்பட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுப்பர். 
எஞ்சிய 3 உறுப்பினர்கள், அரசின் பரிந்துரையின் பேரில் அதிபரால் நியமிக்கப்படுவார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com