பெரு நாட்டில் பேருந்து விபத்து: 48 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பெருவில், மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து உருண்டு விழுந்ததில் 48 பேர் உயிரிழந்தனர்.இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிப்பதாவது:
பெரு நாட்டில் 100 அடி உயரத்திலிருந்து உருண்டு விழுந்து நொறுங்கிய பேருந்து.
பெரு நாட்டில் 100 அடி உயரத்திலிருந்து உருண்டு விழுந்து நொறுங்கிய பேருந்து.

தென் அமெரிக்க நாடான பெருவில், மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து உருண்டு விழுந்ததில் 48 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிப்பதாவது:
பெரு நாட்டின் தலைநகர் லீமாவை நோக்கி, 130 தொலைவிலுள்ள ஹுவாச்சோ நகரிலிருந்து 55 பயணிகளுடன் தனியார் பேருந்து செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தது.
அப்போது, கடலையொட்டிய மலைப் பாதை வழியாக அந்தப் பேருந்து வந்தபோது, 'சாத்தான் வளைவு' என்றழைக்கப்படும் அபாயகரமான ஒரு திருப்பத்தில் நிலை தடுமாறி விழுந்தது.
100 அடி பள்ளத்தில், கடற்கரை பாறைகளின் மீது அந்தப் பேருந்து தலைகீழாக உருண்டு விழுந்ததில், ஏறத்தாழ முழுவதுமாக நொறுங்கியது.
இந்தச் சம்பவத்தில், 48 பேர் உயிரிழந்ததாக உள்துறை அமைச்சகத்தின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்திலிருந்தவர்களில் பெரும்பாலோனார் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், பேருந்து விழுந்த பகுதியில் கடலலைகள் அதிகரித்துள்ளதால், பேருந்திலிருந்து உடல்களை மீட்கும் பணிகள் இரவில் நிறுத்தப்பட்டு, பிறகு புதன்கிழமை காலை மீண்டும் தொடங்கப்பட்டதாகக் கூறினார்.
விபத்துப் பகுதிக்கு காவல்துறை ஹெலிகாப்டர்கள் மூலம்மீட்புக் குழுவினர் அனுப்பப்ட்டனர். 
பல மீட்புப் படையினர் கயிறு மூலம் இறங்கி, மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
கடலின் நீர்மட்டம் மீண்டும் அதிகரிப்பதற்குள் மீட்புப் பணிகளை நிறைவேற்றுவதற்காக, பெரு நாட்டுக் கடற்படை தனது படகுகள் மூலம் மீட்புக் குழுவினரை அனுப்பியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com