பாக். மீதான அமெரிக்காவின் நிதித் தடைக்கு இந்தியா மீது சீன ஊடகம் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் மீது அமெரிக்கா விதித்துள்ள நிதித் தடைக்கு இந்தியா காரணம் என்று சீன ஊடகம் குற்றம்சாட்டியுள்ளது.
பாக். மீதான அமெரிக்காவின் நிதித் தடைக்கு இந்தியா மீது சீன ஊடகம் குற்றச்சாட்டு

பயங்கரவாத சம்பவங்களுக்கு தொடர்ந்து துணை போவதாகக் கூறி பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதிக்கு அந்நாட்டு அதிபர் டொனல்டு டிரம்ப் தடை விதித்துள்ளார்.

இதற்கு இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கை முடிவுதான் முக்கிய காரணம் என்று சீன ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தானுடன் சீனா நல்லுறவுடன் செயல்பட்டு தெற்காசியாவில் சக்தியாவய்ந்த கூட்டணியாக அமைய வேண்டும் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சீன ஊடக நிறுவனமான குலோபல் டைம்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதிக்கு தடை விதித்ததற்கு இந்தியாவின் சமீபத்திய வெளியுறவுத்துறை கொள்கை முடிவு தான் முக்கிய காரணம். அண்டை நாடுகளுடனான சுமூக உறவு மேம்பட இந்தியா தனது வெளியுறவுத்துறை கொள்கை முடிவு தொடர்பான நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்.

அண்டை நாடுகளுகளுடனான உறவை மேம்படுத்தும் விதாமாக இனி சீனா மற்றும் ரஷியாவுடனான உறவில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும். பாகிஸ்தானின் மத்திய வங்கி அதன் பொருளாதார கொள்கையை அமெரிக்க டாலரில் இருந்து சீனாவின் யுவானுக்கு மாற்றியமைத்துள்ளது வரவேற்கத்தக்கது. 

அதுபோல சீனாவும் வணிக ரீதியிலும், பொருளாதார அடிப்படையிலும் பாகிஸ்தானுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். சீனா, பாகிஸ்தான் இடையிலான உறவு அமெரிக்காவுக்கு எதிரானது என்று நினைக்கத் தேவையில்லை. மாறாக, தெற்காசிய நாட்டில் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மேம்படுவது தொடர்பாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com