பிரிட்டனில் முதல் பெண் சீக்கிய எம்.பி. நிழல் அமைச்சராக நியமனம்

பிரிட்டனின் முதல் பெண் சீக்கிய எம்.பி.யான பிரீத் கௌர் கில்லை அந்நாட்டு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரேமி கார்பின் தாம் அமைத்துள்ள நிழல் அமைச்சரவையில் ஓர் அமைச்சராக நிமயமித்துள்ளார்.

பிரிட்டனின் முதல் பெண் சீக்கிய எம்.பி.யான பிரீத் கௌர் கில்லை அந்நாட்டு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரேமி கார்பின் தாம் அமைத்துள்ள நிழல் அமைச்சரவையில் ஓர் அமைச்சராக நிமயமித்துள்ளார்.
பிரிட்டனில் ஆளும் அரசின் அமைச்சரவையை விமர்சிப்பதற்கும், தவறுகளை சுட்டிக் காட்டுவதற்கும் பிரதான எதிர்க்கட்சி நிழல் அமைச்சரவையை அமைப்பது வழக்கம். அதன்படி எதிர்க்கட்சியின் மூலம் ஒவ்வொரு துறைக்கும் நிழல் அரசுக்கான அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் அரசில் அத்துறையை வகிக்கும் அமைச்சரிடம் கேள்விகளை எழுப்புவது மரபாகும். இந்த வகையில் எதிர்க்கட்சியானது மாற்று அரசு போல் செயல்படும்.
இதனிடையே, கடந்த ஆண்டு ஜூன் 8-இல் நடைபெற்ற பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் பிர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் தொகுதியில் இருந்து தொழிலாளர் கட்சி சார்பில் சீக்கியப் பெண்ணான பிரீத் கௌர் கில் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் உள்துறை தேர்வுக் குழுவ உறுப்பினராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரேமி கார்பின் தனது நிழல் அமைச்சரவையில் பிரீத் கௌர் கில்லை சர்வதேச வளர்ச்சிக்கான நிழல் அமைச்சராக நியமித்துள்ளார்.
முன்னதாக, எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது பிரீத் கௌர் கூறுகையில் "இந்தத் தேர்தலுக்கு முன்பு இங்கு சீக்கிய எம்.பி.யே இருந்ததில்லை. எனவே சீக்கியர்களுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது. நாடாளுமன்றத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.
அப்போது முதல் அவருக்குத் தொடர்ச்சியாக பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டன. பிரிட்டன் உள்துறை அமைச்சகத்தின் செயல்பாட்டை கண்காணிக்கும் அனைத்துக் கட்சிகள் அடங்கிய தேர்வுக் குழுவுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டதோடு, பிரிட்டனில் வாழும் சீக்கியர்களுக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com