பதிமூன்று குழந்தைகளை வீட்டுக்குள் சங்கிலியால் கட்டி சித்ரவதை: கொடூர பெற்றோர் கைது! 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 2 வயது முதல் 29 வயது வரை உள்ள 13 குழந்தைகளை, வீட்டுக்குள் சங்கிலியால் கட்டி அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்த பெற்றோர்கள், கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதிமூன்று குழந்தைகளை வீட்டுக்குள் சங்கிலியால் கட்டி சித்ரவதை: கொடூர பெற்றோர் கைது! 

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 2 வயது முதல் 29 வயது வரை உள்ள 13 குழந்தைகளை, வீட்டுக்குள் சங்கிலியால் கட்டி அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்த பெற்றோர்கள், கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கலிபோர்னியா மாகாணத்தின் ரிவர்சைட் காவல்துறை தெரிவித்துள்ளதாக பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

லாஸ் ஏஞ்சலீஸில் இருந்து 95 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பகுதி பெரிஸ். இங்கு வசித்து வந்தவர்கள் டேவிட் ஆலன் டர்பின் மற்றும் லூயிஸ் அன்னா டர்பின் தம்பதியினர். இவரகளது வீட்டில்தான் அந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 

கடந்த ஞாயிறன்று அங்கு இருந்து தப்பி வந்த 10 வயது சிறுமியொருத்தி அங்கு தனக்கு கிடைத்த அலைபேசி ஒன்றின் மூலமாக, ரிவர்சைட் காவல்துறைக்கு, வீட்டில் தனது சகோதர சகோதரிகளான மேலும் 12 பேர் சிறைபட்டிருக்கும் தகவலைத் தெரிவித்துள்ளார். இதனால் உஷாரான காவல்துறையினர், உடனடியாக அந்த வீட்டிற்கு சோதனைக்குச் சென்றுள்ளனர்.  

அங்கு அவர்கள் கண்ட காட்சியானது அவர்களை அதிர்ச்சியிலாழ்த்தியுள்ளது. 2 வயது முதல் 29 வயது வரை உள்ள 13 குழந்தைகள் அந்த வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அதில் சிலர் தங்களது படுக்கைகளில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, பூட்டு போடப்பட்டிருந்துள்ளனர். மேலும் அவர்களில் சிலர் 18 முதல் 29 வயது வரையுள்ள பெரியவர்கள் ஆவார்கள். அவர்கள் இருந்த இடமானது சுகாதாரக் குறைவாக இருந்ததுடன், அவர்களும் போதிய உணவு அளிக்கப்படாமல் மெலிந்து, அழுக்கான ஆடைகளுடன் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஏன் அவ்வாறு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதற்கான சரியான காரணங்களைக் கூற இயலாததால் டேவிட் ஆலன் டர்பின் மற்றும் லூயிஸ் அன்னா டர்பின் தம்பதியினர் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குழந்தைகளை சித்ரவதை செய்தல் மற்றும் ஆபத்து உண்டாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட குழந்தைகளை அனைவரும் தற்பொழுது மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com