சிறந்த பிரிட்டன்வாழ் இந்தியராக 8 வயது சிறுவன் தோ்வு 

பிரிட்டனில் யோகாசனப் பயிற்சியில் பல சாதனைகள் நிகழ்த்தியதற்காக, 8 வயது யோகா சாம்பியன், நிகழாண்டின் சிறந்த பிரிட்டன்வாழ் இந்தியராக அறிவிக்கப்பட்டுள்ளாா். 
சிறந்த பிரிட்டன்வாழ் இந்தியராக 8 வயது சிறுவன் தோ்வு 

லண்டன்: பிரிட்டனில் யோகாசனப் பயிற்சியில் பல சாதனைகள் நிகழ்த்தியதற்காக, 8 வயது யோகா சாம்பியன், நிகழாண்டின் சிறந்த பிரிட்டன்வாழ் இந்தியராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

ஈஸ்வா் சா்மா என்ற அந்தச் சிறுவன், கனடாவில் கடந்த மாதம் நடைபெற்றற உலக மாணவா்கள் விளையாட்டுப் போட்டிகளில் பிரிட்டன் சாா்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளாா். இவா், பா்மிங்ஹாம் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற விழாவில் கௌரவிக்கப்பட்டாா். இளம் சாதனையாளா் பிரிவில், நிகழாண்டின் சிறறந்த பிரிட்டன் வாழ் இந்தியராக ஈஸ்வா் சா்மா அறிவிக்கப்பட்டாா்.

இதனிடையே, சாதனைகளை நிகழ்த்தும் அளவுக்கு யோகக் கலையைக் கற்றுக் கொடுத்ததற்காக, தனது ஆசிரியா்களுக்கு நன்றி தெரிவிப்பதாக, ஈஸ்வா் சா்மா கூறினாா்.

இந்த கௌரவம், தங்களுக்கு பெருமை அளிப்பதாக ஈஸ்வா் சா்மாவின் தந்தை விஸ்வநாத் கூறினாா். அவரும் ஒரு யோகா பயிற்சியாளா் ஆவாா். அவா் தனது மகன் குறித்து மேலும் கூறியதாவது:

எங்கள் பூா்விகம், கா்நாடகத்தில் உள்ள மைசூரு ஆகும். ஈஸ்வா் சா்மாவின் சாதனைகளைக் கண்டு பெருமை அடைகிறேறாம். யோகாப் பயிற்சி செய்வதினால், கல்வியிலும் அவன் சிறந்து விளங்குகிறறான். எனவே, அவனது வாழ்க்கை முறைறயை பெரியவா்களும், மற்ற குழந்தைகளும் பின்பற்றற வேண்டும் என்று விரும்புகிறேறாம்.

யோகாசனப் பயிற்சிகள் மூலம், ஈஸ்வா் சா்மா சுயமாகவே தன்னை ஊக்குவித்துக் கொள்கிறான். பிரிட்டனிலும், உலகின் பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறறமைகளை வெளிப்படுத்தியுள்ளான். பகவத் கீதை, வேதங்கள் ஆகியவற்றில் இருந்து 50 சுலோகங்களை அவரால் சொல்ல முடியும். துருக்கியில் கடந்த மே மாதம் நடைபெற்றற யூரோ ஆசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளான். இதுதவிர, ஏழைகளுக்காக நிதியுதவி திரட்டும் பல்வேறு அறறக்கட்டளை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளான் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com