கியூபா: அரசியல் சாசனத்தில் சீர்திருத்தம்

கியூபா அரசியல் சாசனத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அதற்கான தீர்மானம் அடுத்த மாதம் கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கியூபா அரசியல் சாசனத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அதற்கான தீர்மானம் அடுத்த மாதம் கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 
1976-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட அரசியல் சாசனத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் திருத்தங்களின் மூலம், அரசின் கட்டமைப்பு, நீதிமன்றங்கள், பொருளாதாரம் ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. 
திருத்தப்பட்ட அரசமைப்புச் சட்டத்திலும் கியூபாவின் முழு அரசியல் அதிகாரம் மிக்க கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி திகழும்; கம்யூனிச கொள்கைகள் தொடர்ந்து பின்பற்றப்படும்; எனினும், பொருளாதார தாரளமாயமாக்கலுக்கும் இடமளிக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com