இந்தியாவுக்கு பயங்கரவாதி, பாகிஸ்தானுக்கு வாக்காளர்: பாக்., பொதுத்தேர்தலில் வாக்களித்தார் ஹபீஸ் சயீத்

மும்பை தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் வாக்களித்தார். 
இந்தியாவுக்கு பயங்கரவாதி, பாகிஸ்தானுக்கு வாக்காளர்: பாக்., பொதுத்தேர்தலில் வாக்களித்தார் ஹபீஸ் சயீத்

பாகிஸ்தானில் 11-ஆவது பொதுத் தேர்தல் புதன்கிழமை காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மும்பை தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட லக்ஷ்ர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் வாக்களித்தார். 

இந்த தேர்தலில் ஹபீஸ் சயீத்தின் மகன், மருமகன் ஆகியோர் இந்த பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். முன்னதாக, அவர்களுக்கு ஹபீஸ் சயீத் நேரடியாக பிரச்சாரம் செய்து சர்ச்சை ஏற்படுத்தியிருந்தார். இதற்கு அமெரிக்கா தரப்பில் இருந்து கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், அவர் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்து சென்றுள்ளது மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வகையில் அமைந்துள்ளது. 

இதுதொடர்பாக, மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர், 'ஹபீஸ் சயீத் ஒரு பயங்கரவாதி. இவரைப் போன்ற ஆட்களால் பாகிஸ்தானின் ஜனநாயகம் அபாயகரமான நிலையில் உள்ளது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com