ட்ரம்ப் சந்திப்புக்கு வடகொரிய அதிபருக்காக கூடவே வந்த 'ரெடிமேட் கழிவறை': மலைக்க வைக்கும் பின்னணி 

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடனான சந்திப்புக்கு சிங்கப்பூர் வந்திருந்த வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தன்னுடன் கூடவே கொண்டு வந்த 'ரெடிமேட் கழிவறை' கொண்டு வந்ததன் பின்னணி தெரிய வந்துள்ளது.
ட்ரம்ப் சந்திப்புக்கு வடகொரிய அதிபருக்காக கூடவே வந்த 'ரெடிமேட் கழிவறை': மலைக்க வைக்கும் பின்னணி 

சிங்கப்பூர்:  அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடனான சந்திப்புக்கு சிங்கப்பூர் வந்திருந்த வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தன்னுடன் கூடவே கொண்டு வந்த 'ரெடிமேட் கழிவறை' கொண்டு வந்ததன் பின்னணி தெரிய வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடனான சந்திப்பு சிங்கப்பூரின் செண்டோசா தீவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த என்ற ஒரு வார்த்தையால் மட்டும் இந்த சந்திப்பை குறிப்பிட்டு விட முடியாது, சரித்திர சந்திப்பு என்றும் கூறலாம்.

அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு பல மணி நேரங்கள் நீடித்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான பல முக்கிய ஒப்பந்தங்களிலும் இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

இந்த சந்திப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் வரலாறு காணாத அளவில் செய்யப்பட்டு இருந்தன.குண்டு கிம்முக்கான குண்டு துளைக்காத கார், அதிபர் என்ன சாப்பிட வேண்டும், யாருடன் பேச வேண்டும், எங்கு அமர வேண்டும், எந்த அறையில் தங்க வேண்டும், அறையில் எத்தனை பேர் தங்க வேண்டும் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் முன்கூட்டியே துல்லியமாகத் திட்டமிடப்பட்டுள்ளன.

அத்துடன் கிமுக்காக சீனாவின் இரு டீகாய் ரக விமானங்கள், தனிக் கப்பலில் கிம்முக்கு தேவையான உணவுகள், பயன்படுத்தும் குண்டு துளைக்காத கார்கள், குடிநீர், உணவுப்பொருட்கள், உடைகள் உள்ளிட்ட அனைத்தும் கொண்டு வரப்பட்டுள்ளன. அதிபர் டிரம்பின் சந்திப்புக்குப் பின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவுகளை மட்டுமே குறிப்பிட்ட ஹோட்டலில் சாப்பிடுவதற்கு அதிபர் கிம் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதிலும் குறிப்பாக வடகொரிய அரசு அதிபர் கிம்முக்கென சொந்தமாக 'ரெடிமேட் கழிவறை' ஒன்றை எடுத்து வந்து அதைத்தான் பயன்படுத்தியதுதான் இதன் உச்ச கட்டமாகும்.  அமெரிக்கா மீது இன்னும் முழுமையான நம்பிக்கை வராத காரணத்தினால் கூட, வடகொரியா அரசு அதிபர் கிம் தனக்கென சொந்தமாக ரெடிமேட் கழிவறை கொண்டு வந்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவித்தன. 

கிம் தங்கியிருந்த விலையுயர்ந்த நட்சத்திர ஹோட்டலில் ‘டாய்லட்’ இருந்த போதிலும் அதை அதிபர் கிம் ஜாங் பயன்படுத்தவில்லை. தான் கொண்டு வந்த கழிவறையைத்தான் பயன்படுத்தியுள்ளார் என்று தென் கொரிய நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கான காரணங்களும் தற்பொழுது பேசப்பட்டு வருகின்றன.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் எப்போதும் தனது பாதுகாப்பில் தீவிர ஈடுபாடு காட்டுபவர். கடந்த 32 ஆண்டுகளில் வடகொரியாவின் அதிபர் ஒருவர்  வேற்று நாட்டு மாநாடு ஒன்றில் பங்கேற்கச் செல்வது இதுதான் முதல் முறையாகும். எனவே எதிரிகளிடம் எந்தவிதத்திலும் தன்னைப்பற்றிய விவரங்கள் கசிந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

பொதுவாக எதிரிகள் எந்தவிதத்திலும் அதிபர் கிம் ஜாங்கை தாக்கலாம் அல்லது எதிர்காலத்தில் தாக்குவதற்கான முன் திட்டமிடலை செய்யலாம் என்ற எண்ணம் அவருக்கு உண்டு. எனவே தன்னைப் பற்றிய எந்தவிதமான ரகசியமும் வெளியே கசிந்துவிடாமல் பாதுகாப்பதில் அதிக முக்கியத்துவம் அளிப்பார்.

அதன் ஒரு பகுதியாகவே தான் பயன்படுத்தும் கழிவறையில் இருந்து வெளியேறும், சிறுநீர், மலம் ஆகியவற்றைக் கூட எதிரிகள் கைப்பற்றி, அதன் மூலம் தனது உடல்நிலை, உடலில் உள்ள குறைபாடுகள், திசுக்கள், பாக்டீரியாக்கள், என்னமாதிரியான உணவுப்பழக்கம் உள்ளிட்டவற்றைக் கண்டுபிடித்து விடலாம் என்ற அச்சம் கிம்முக்கு உண்டு.  எனவேதான் தனக்கான கழிவறையைக் கூட அதிபர் கிம் உடன் கொண்டு சென்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com