புறா தலையுடன் பிடிபட்ட மீன்: சீனாவில் ஓர் அதிசயம் (விடியோ இணைப்பு) 

சீனாவில் புறா தலையுடன் மீன் ஒன்று பிடிபட்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது.
புறா தலையுடன் பிடிபட்ட மீன்: சீனாவில் ஓர் அதிசயம் (விடியோ இணைப்பு) 

குயாங் (சீனா): சீனாவில் புறா தலையுடன் மீன் ஒன்று பிடிபட்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது.

சீனாவின் குயிஷோயி மாகாணத்தில் உள்ளது குயாங் பகுதி. இங்குள்ள மீனவர் ஒருவரின் வலையில் புறா போன்ற தலை கொண்ட அதிசய மீன் கடந்த வாரம் சிக்கியுள்ளது.இதைக் கண்ட அவர் உடனடியாக அது குறித்து ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆச்சரியமடைந்த மக்கள் இந்த விசித்திர மீனை பார்ப்பதற்கு பெருமளவில் திரண்டுள்ளனர். 

இந்த வகை விசித்திர மீனை இதுவரைக் கண்டிராத அப்பகுதி மக்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து தத்தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.’கிராஸ் கார்ப்’ என்றழைக்கப்படும் இந்த வகை மீன்கள் சுத்தமான தண்ணீரில் மட்டுமே வாழும் தன்மை கொண்டது எனவும், ஆசியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தான் இது பெரும்பாலும் காணப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விடியோ: 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com