கூகுள் மேப்கள் வழியாக உபேர் வாகனங்களை நேரடியாக 'புக்' செய்யும் வசதியை ரத்து செய்த கூகுள்

கூகுள் மேப்கள் வழியாக உபேர் வாடகை வாகனங்களை நேரடியாக  'புக்' செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் ரத்து செய்துள்ளது.
கூகுள் மேப்கள் வழியாக உபேர் வாகனங்களை நேரடியாக 'புக்' செய்யும் வசதியை ரத்து செய்த கூகுள்

சான் பிரான்சிஸ்கோ:  கூகுள் மேப்கள் வழியாக உபேர் வாடகை வாகனங்களை நேரடியாக  'புக்' செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் ரத்து செய்துள்ளது.

செயலி சார்ந்து வாடகை வாகனங்களை புக் செய்யும் சேவையில் உலகின் பிரபலமான நிறுவனங்களிலொன்று உபேர். ஆனால் கூகிளின் மேப் சேவையை பயன்படுத்துபவர்கள் 'உபேர்' நிறுவன அதிகாரப்பூர்வ செயலியை பயன்படுத்தாமல், கூகிளின் மேப் வழியாகவே வாகனங்களை புக்செய்யும் வசதியானது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறையில் உள்ளது.

அதன்படி கூகிளின் மேப் வழியாக நீங்களே நீங்கள் செல்ல வேண்டிய இடம் மற்றும் வழி ஆகியவற்றை முடிவு செய்த பின்னர், உபேர் நிறுவன கட்டண விபரங்களை மேப்  செயலியில் இருந்த படியே தெரிந்து கொண்டு வாகனத்தினை புக் செய்து கொள்ளலாம்.

ஆனால் கூகுள் மேப்கள் வழியாக உபேர் வாடகை வாகனங்களை நேரடியாக  'புக்' செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் தற்பொழுது ரத்து செய்துள்ளது.

திங்கள் முதல் அந்த சேவையினை பயன்படுத்த விரும்பியவர்களுக்கு, "இனி உபேர் பயணங்களை கூகுள் மேப்கள் வழியாக புக் செய்ய இயலாது"  என்ற செய்தி மட்டும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு என்ன காரணமா என்று தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக இந்த வசதியானது ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்திற்கு முன்பாவாகவே ஆப்பிளின் ஐஓஎஸ் இயங்குதளத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com