பெயர் மாற்றம்: மேசிடோனியா நாடாளுமன்றம் ஒப்புதல்

மேசிடோனியா நாட்டின் பெயரை வடக்கு மேசிடோனியா' என்று மாற்றுவதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேசிடோனியா நாட்டின் பெயரை வடக்கு மேசிடோனியா' என்று மாற்றுவதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து 120 இடங்களைக் கொண்ட மேசிடோனியா நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், பெயர் மாற்றத்துக்கு ஆதரவாக 69 எம்.பி.க்கள் வாக்களித்தனர்.
இதையடுத்து, இந்த விவகாரம், பொதுவாக்கெடுப்புக்கு விடப்படும். யூகோஸ்லாவியாவிலிருந்து கடந்த 1991-ஆம் ஆண்டில் பிரிந்து தனி நாடான மேசிடோனியா, அந்தப் பெயரைப் பயன்படுத்துவதற்கு அண்டை நாடான கிரீஸ், எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
மகா அலெக்ஸாண்டருடைய பேரரசின் தொட்டிலாக விளங்கிய மேசிடோனியா, கிரேக்கர்களின் மாபெரும் கெளரவமாகக் கருதப்படுகிறது. தங்களை மேசிடோனியர்கள் என்று கூறிக் கொள்வதில் அவர்கள் பெருமை கொண்டுள்ளனர்.
எனவே, ஐ.நா.விலும், ஐரோப்பிய யூனியனிலும் மேசிடோனியா உறுப்பினராக இருப்பதற்கு கிரீஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்த நிலையில், இந்த பெயர் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், மேசிடோனியாவின் பெயரை வடக்கு மேசிடோனியா' என்று மாற்றம் செய்வதற்கான ஒப்பந்தம் கிரீஸ் பிரதமர் அலெக்ஸிஸ் சைப்ரஸுக்கும், மேசிடோனியா பிரதமர் úஸாரான் ஸயேவுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தானது.
இதன் மூலம், கிரீஸுக்கும், மேசிடோனியாவுக்கும் இடையே நீண்ட காலமாக நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இரு நாடுகளையும் சேர்ந்த தேசியவாதிகள் இந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com