பாகிஸ்தானில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முதல் தலித் பெண் எம்.பி! 

பெரும்பான்மையான அளவில் இஸ்லாமியர்கள் வசிக்கும் நாடான பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக தலித் பெண் ஒருவர் நாடாளுமன்ற எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முதல் தலித் பெண் எம்.பி! 

இஸ்லாமாபாத்: பெரும்பான்மையான அளவில் இஸ்லாமியர்கள் வசிக்கும் நாடான பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக தலித் பெண் ஒருவர் நாடாளுமன்ற எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் சிந்து மாநிலம், நாகர்பாரிக்கர் மாவட்டத்தில் உள்ள தார் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி 1979-ம் ஆண்டு பிறந்தவர். கிருஷ்ணகுமாரியின் பெற்றோர்களும், அவரும் பண்ணையார் ஒருவரிடம் மூன்று ஆண்டுகள் அடிமைகளாகப் பணியாற்றினர்.

அடிமையாக வேலை செய்து கொண்டே 9-ம் வகுப்பு வரை படித்த கிருஷ்ணகுமாரி தனது 16-வது வயதில் லால்சந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னரும் மேற்கொண்டு படிப்பைத் தொடர்ந்து, சிந்து பல்கலைகழகத்தில் சேர்ந்து, சோஷியாலஜி பிரிவில் பட்டம் பெற்றார்.

அதன்பின் பாகிஸ்தானின் மறைந்த அதிபர் பேநசீர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். முதல் முறையாக பெரானா நகரத்தின் யூனியன் கவுன்சில் தலைவராக தேர்வானார்.

தார் பகுதி அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமூகத்தில் நலிந்த பிரிவினருக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் கிருஷ்ணகுமாரி தொடர்ந்து பணியாற்றி வந்தார்.

அதன்பின் சமீபத்தில் பாகிஸ்தானின் செனட் அவையில் 52 உறுப்பினர்களுக்கான இடம் காலியாக உள்ளதால், அதற்கான தேர்வு நடந்தது. இதில் சிந்து மாநிலத்தில் இருந்து பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் கிருஷ்ணகுமாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பாகிஸ்தானில் மத சிறுபான்மையினராகி இருக்கும் இந்து மதத்தில் இருந்து ஒரு தலித் பெண் எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவது மிகவும் குறிப்பிடத்தக்க சம்பவமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com